தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்ட பென்சன்! சிலிர்த்து போன பல லட்சம் பேர்! அறிவிப்புன்னா இப்படி இருக்கணும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா என்ற கேள்வி நிலவி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சிலருக்கான ஓய்வூதியம் உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி விடுதலை போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கி வரும் பென்சன் உயர்த்தப்பட்டு உள்ளது.

மத்திய அரசு ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதையடுத்து பல மாநிலங்களில் இதே திட்டத்தை மாநில அரசு ஊழியர்களுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயம் வந்துள்ளது.

jobs job old pension scheme pension

பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவதற்கு பதிலாக, அதே பழைய ஓய்வூதியத்தை ஸ்டைலை கொண்ட, ஆனால் கூடுதல் பலன்களை கொண்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நாடு முழுக்க உள்ள மத்திய அரசு ஊழியர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பென்ஷன் திட்டத்தில் பெரிய அளவில் இதன் மூலம் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால் தமிழக அரசுக்கு இதன் மூலம் பெரிய செக் வைக்கப்பட்டு உள்ளது. அதாவது தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் இதனால் பழைய ஓய்வூதிய திட்டம் அல்லது இதே ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

அதாவது 50% சதவிகித சம்பளத்தை ஓய்வூதியமாக அளிப்பது + அகவிலைப்படி தருவது இரண்டும் சேர்த்து கொடுப்பது அவசியம் ஆகி உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு இதன் மூலம் மத்திய அரசு செக் வைத்துள்ளது.

உயர்வு: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சிலருக்கான ஓய்வூதியம் உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி விடுதலை போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கி வரும் பென்சன் உயர்த்தப்பட்டு உள்ளது.

இவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20,000 என்பது 21,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த சுதந்திரன் அன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது இது அமலுக்கு வந்துள்ளது. இந்த மாதம் கூடுதல் பென்சன் வழங்கப்பட்டது.

இந்த மாதம் அவர்களின் வங்கி கணக்கில் கூடுதல் பணம் வரவுவைக்கப்பட்டது . மேலும் விடுதலை போராட்ட தியாகிகள் குடும்பத்திற்கு வழங்கப்படும் பென்சன் உயர்த்தப்பட்டு உள்ளது. இவர்களுக்கு மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11,000த்திலிருந்து ரூ.11,500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த மாதம் அவர்களின் வங்கி கணக்கில் கூடுதல் பணம் வரவுவைக்கப்பட்டது .

பழசு புதுசு வேறுபாடு: தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்து கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.

அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியம்: இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. யுபிஎஸ் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களிலிருந்து சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு சமமான இந்த முழு ஓய்வூதியத்திற்கு தகுதி பெற, ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+