யூடியூப் சேனல் நடத்த அரசு டிரெய்னிங்.. எல்லாமே இலவசம்! சான்றிதழும் இருக்கு - விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: உலகம் முழுவதும் மிகப்பெரிய சமூக ஊடகமாக வளர்ந்து நிற்கும் யூடியூப் மூலமாக கோடிக்கணக்கானோர் புகழ்பெற்று பிரபலங்களாகவும், தொழிலதிபர்களாகவும், உருவெடுத்து இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசே யூடியூப் சேனல் நடத்துவதற்கான சான்றிதழுடன் கூடிய இலவச பயிற்சியை அளிக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 29.01.2024 முதல் 31.01.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல். சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது. பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் - மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம்
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சிட்கோ தொழிற்பேட்டை பார்த்தசாரதி கோயில் தெரு, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032. 44-22252081/22252082, 8668102600/8668100181/7010143022.
முன்பதிவு அவசியம்: அரசு சான்றிதழ் வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications