TNEA 2025: பொறியியல் படிப்புகளில் சேர மே 7ஆம் தேதி முதல் விண்ணப்பம்
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் (TNEA Counselling 2025 Registration) நாளை மறுநாள் முதல் விநியோகிக்கப்படுகிறது. இது ஜூன் 6ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்லூரி, பாடவாரியாக கடந்த 5 ஆண்டுகளாக எந்தெந்த பிரிவினருக்கு என்னென்ன கட் ஆஃப் என்பது குறித்து ஆன்லைனில் ஏற்கெனவே வெளியிடப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலமாக மட்டுமே மாணவர்கள் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ள முடியும். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது.
இந்த தேர்வுகளை தமிழ்நாடு, புதுவையில் 8.51 லட்சம் மாணவர்கள் எழுதினர். அது போல் தனித்தேர்வர்களாக 23,747 பேர் என மொத்தம் 8.75 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.
இந்த சூழலில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 9ஆம் தேதி வெளியாகிவுள்ளது. மாணவர்கள் தமிழக அரசு கவுன்சலிங் மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 7ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துல்ளது.
7ஆம் தேதி காலை 10 மணிக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், விண்ணப்பப்பதிவை தொடங்கி வைக்கிறார். ஆன்லைன் மூலமாக https://www.tneaonline.org மட்டுமே மாணவர்கள் விண்ணப்ப பதிவை மேற்கொள்ள முடியும்.
மாணவர்களின் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும். தரவரிசை பட்டியலின் கட் ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வின் மூலம் மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளில் விரும்பும் படிப்புகளை தேர்வு செய்யலாம்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் வரும் 9ஆம் தேதி வெளியாகிறது. இந்த தரவரிசை பட்டியல் ஜூலை 2ஆம் வாரம் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து ஜூலை இறுதிக்குள் கலந்தாய்வு தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications