தீபாவளி பண்டிகை! தமிழகத்தில் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் இன்று முதல் விற்பனை
சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி தமிழக அரசின் அமுதம் அங்காடி ரேஷன் கடைகளில் இன்று முதல் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி, நவம்பர் 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடைகள், இனிப்பு, பலகாரங்கள் ஆகும்.

தீபாவளிக்கு பலகாரங்களை வீடுகளில் செய்ய தொடங்கிவிட்டார்கள். இதை செய்ய முடியாதவர்கள் கடைகளில் ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். இப்படியிருக்கையில் ஏழை எளிய மக்களால் மளிகை பொருட்கள் வாங்கி பலகாரம் செய்து தர இயலாது என்பதால் தமிழக அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது.
அதன்படி தீபாவளியையொட்டி குறைந்த விலையில் 15 மளிகை பொருட்களை மக்களுக்கு கொடுப்பது என்பதுதான். அந்த வகையில் ரூ 499 -க்கு மளிகை பொருள் தொகுப்பானது, அமுதம் பிளஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும்.
இது தமிழக அரசின் அமுதம் அங்காடி, அமுதம் ரேஷன் கடைகளில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொகுப்பில் மொத்தம் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

- கடுகு+ உளுத்தம் பருப்பு- 125 கிராம்
- சீரகம்- 100 கிராம்
- வெந்தயம்- 100 கிராம்
- சோம்பு- 50 கிராம்
- மிளகு- 50 கிராம்
- மிளகாய்- 250 கிராம்
- தனியா- 500 கிராம்
- மஞ்சள் தூள் 50 கிராம்
- புளி- 500 கிராம்
- உப்பு- 1 கிலோ
- உளுத்தம் பருப்பு - 500 கிராம்
- கடலை பருப்பு- 200 கிராம்
- பாசிப்பருப்பு- 200 கிராம்
- வறுகடலை- 200 கிராம்
- பெருங்காயத்தூள்- 15 கிராம்
மொத்தம் 3.840 கிலோ கொண்ட பொருட்கள் ரூ 499 க்கு கிடைக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications