அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு..பழைய ஓய்வூதிய திட்டம் வருது? முதல்வர் டேபிளுக்கு போகும் ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், கிட்டத்தட்ட 40 அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் நேரில் விளக்கம் அளித்து இருக்கின்றனர். அனைத்து சங்கங்களும் பழைய ஓய்வூதியம் தான் வேண்டும் என அறிவுறுத்தி இருக்கும் நிலையில், அது தொடர்பான அறிக்கை விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இடம் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அடுத்த மாதத்திலேயே தீபாவளி பரிசாக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் அரசு பங்களிப்புடன் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில் 2003 ஆம் ஆண்டு மத்திய அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. தொடர்ந்து அனைத்து மாநில அரசுகளும் இந்த திட்டத்தை தங்கள் மாநிலங்களில் அறிமுகம் செய்தன.

இதனால் அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் அரசு ஊழியர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

Old Pension Scheme

பழைய ஓய்வூதிய திட்டம்

ஆனால் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டமே தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு நான்கு சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அதிமுகவும் திமுகவும் வாக்குறுதி கொடுத்தன. குறிப்பாக 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பதுதான்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள்

ஆனால் திமுக ஆட்சி அமைந்து நான்காண்டுகள் முடிந்து தற்போது ஐந்தாம் ஆண்டில் பயணிக்கிறது திமுக அரசு. ஆனாலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தாததால் அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் செப்டம்பர் மாதத்திற்குள் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிடாவிட்டால் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவித்தன.

ககன்திப் சிங் பேடி

இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் பழைய ஓய்வூதியம் தோட்டம் தொடர்பாக ஆராய்ந்த இந்த குழு தற்போது அரசு ஊழியர்களிடம் ஆலோசனை பெற்று வருகிறது.

அரசு ஊழியர்களுடன் ஆலோசனை

அந்த வகையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் சங்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, வருவாய்த்துறை ஓட்டுநர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் உள்ளிட்ட 40சங்கங்கள் கடந்த ஒரு மாதமாக அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழுவை சந்தித்து பேசியுள்ளனர்.

தமிழக அரசு

மேலும், செப்டம்பர் 8ஆம் தேதி வரை இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது. இதற்கிடையே முன்பு சந்தித்த சங்கங்களும் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு தமிழகத்தில் மீண்டும் அறிமுகப்படுத்த இருப்பதாகவும், அது தொடர்பான அறிவிப்பு செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் தீபாவளி பரிசாக அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்படும் என கூறுகின்றனர் தலைமை செயலக வட்டாரத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+