எப்படி இப்படி யோசிக்கிறாங்க! தமிழ்நாடு அரசின் அசத்தல் அறிவிப்பு.. வியந்து போன மக்கள்.. ஒரே குஷி!
சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் ஹோட்டல்கள் அனைத்திற்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு எப்போதுமே சமூக நலத்திட்டங்களில், முற்போக்கு திட்டங்களில் முன்னோடி. தமிழ்நாடு அரசு கொண்டு வரும் பல திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து இருக்கின்றன.
உதாரணமாக சத்துணவு திட்டம் , காலை உணவு திட்டம் மொத்த நாட்டிற்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டு திட்டமாக மாறியது. அதோடு இல்லாமல் தேசிய அளவில் தற்போது பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கும் திட்டம் பல மாநிலங்களில் கொண்டு வரப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு முன்னேற்றம் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படியே தமிழ்நாட்டில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதேபோல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டமும் நடைமுறையில் வர உள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமூக நீதி திட்டம்; இப்படி பல திட்டங்கள் கவனம் பெற்று வரும் நிலையில்தான் யாருமே யோசிக்காத கோணத்தில் முக்கியமான ஒரு மனித நேயமிக்க அறிவிப்பை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். இன்று காலை தமிழ்நாட்டில் இருக்கும் ஹோட்டல்கள் அனைத்திற்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.

அதன்படி தமிழக அரசின் புதிய அரசாணையின்படி, ஓட்டல்களில், வாகன ஓட்டிகளுக்கு, பார்க்கிங் இடத்துக்கு ஏற்றவாறு, கழிவறையுடன் தனி படுக்கையறைகளும் வழங்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹோட்டலில் இருந்து 250 மீட்டர் தூரத்திற்குள் அல்லது வளாகத்திற்குள் இப்படி தங்க இடம் வழங்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக மக்கள் பயணம் செய்யும் போதும், அரசியல் தலைவர்கள் பயணம் செய்யும் போதும் டிரைவர்கள் வெளியே தங்கும் நிலை ஏற்படும். கார்களில் தூங்கும் நிலை ஏற்படும். அல்லது காற்றாடி இல்லாத கட்டாந்தரையில் தூங்கும் நிலை ஏற்படும். இது போன்ற கொடுமைகளை தடுக்க தமிழ்நாடு அரசு இந்த அரசாணையை வெளியிட்டு உள்ளது.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications