Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ட்ரோல் பண்றாங்க.. வாதம் வைத்த தவெக.. டிரான்ஸ்பார்மர் மேலதான் ஏற வேணாம்னு சொன்னோம்.. அரசு வாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ரோடு உள்ளிட்ட பிரச்சாரங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் தவெகவிற்கு எதிராக தமிழக அரசு முக்கியமான வாதங்களை வைத்தது.

செப்டம்பர் 27 அன்று நடந்த நடிகர் விஜய் அவர்களின் தமிழ் வெற்றி கழகம் (TVK) கட்சியின் கரூர் பேரணியில் ஏற்பட்ட துயர சம்பவத்திற்கு பிறகு, தலைமை நீதிபதி மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நவம்பர் 11-ம் தேதிக்குள் வரைவு அரசியல் கூட்டங்களுக்கான SOP-ஐ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரனிடம் தெரிவித்தனர்.

TVK Vijay

இதையடுத்து கடந்த வாரம் அனைத்துக்கட்சி கூட்டம் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்டது. இதில் புதிதாக வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தமிழக அரசு - அனைத்து கட்சி கூட்ட முடிவு

அதன்படி அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்னர் அனுமதி வழங்கப்படும். கூட்டங்கள், பேரணிகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வைப்புத் தொகை வசூலிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே பொதுமக்கள் காத்திருக்க அனுமதியளிக்கப்படும். பொதுக்கூட்டங்கள், பேரணிகள் என அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதியளிக்கப்படும்.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) 10 நாட்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டன.

இன்று வழக்கு விசாரணை

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ரோடு உள்ளிட்ட பிரச்சாரங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் தவெகவிற்கு எதிராக தமிழக அரசு முக்கியமான வாதங்களை வைத்தது. இது தொடர்பாக இன்று நடந்த வழக்கில்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காத போதிலும், தங்களது ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் தமிழக அரசுக்குச் சமர்ப்பிக்கலாம் என தலைமை நீதிபதி மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, தமிழக வெற்றிக் கழகம் (TVK) வழக்கறிஞர் எஸ். அறிவழகனிடம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) குறித்த தங்களது கட்சியின் பரிந்துரைகளை தமிழக அரசு பரிசீலிக்கலாம் என்று குறிப்பிட்டார். இந்த SOP அரசியல் கூட்டங்களுக்கு மட்டும் வரம்பிடாமல், அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடும் பிற நிகழ்வுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் எஸ். அறிவழகன், "எங்கள் கட்சிக்கு 23 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால், மற்ற கட்சிகளுக்கு அந்த நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை" என்று தனது தரப்பை முன்வைத்தார். இதற்கு, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜே. ரவீந்திரன், "டிரான்ஸ்பார்மர்கள் மீது ஏறக்கூடாது என்பதே அவர்களுக்கு விதிக்கப்பட வேண்டிய முக்கிய நிபந்தனை" என்று பதிலளித்தார்.

அரசியல் கட்சிகள், குறிப்பாக த.வெ.க. உட்பட அனைத்துத் தரப்பினரின் பரிந்துரைகளைப் பெற்று, SOP-யின் இரண்டாவது வரைவை நவம்பர் 20-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு கால அவகாசம் வழங்கியது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+