நிதி கொடுக்காமல் கைவிரித்த மத்திய அரசு.. மெட்ரோ ரயிலை வாங்க தமிழ்நாடு அரசின் மாஸ்டர்பிளான்.. சிக்ஸர்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) அதன் நெட்வொர்க்கில் இயக்க 6 பெட்டிகள் கொண்ட ரயில்களை வாங்குவதற்கான ₹2,580 கோடி திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து நிதி உதவி பெற உள்ளது.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு நிதி: இந்த நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு நிதி இல்லாமலே வெறும் மாநில அரசின் நிதியிலேயே மெட்ரோ கட்டப்பட்டு வருகிறது.
மத்திய அரசு நிதி ஒதுக்காமல் கைவிரித்து வரும் நிலையில் கூடுதல் நிதிகளை பல்வேறு சர்வதேச வங்கிகளிடம் இருந்து தமிழ்நாடு அரசு பெற்று வருகிறது. இவர்களின் உதவியுடன்தான் தமிழ்நாடு அரசு மெட்ரோ சேவை கட்டுமானங்ளை மத்திய அரசின் உதவி இல்லாமலே மேற்கொண்டு வருகிறது.
மெட்ரோ பெட்டிகள்: அந்த வகையில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) அதன் நெட்வொர்க்கில் இயக்க 6 பெட்டிகள் கொண்ட ரயில்களை வாங்குவதற்கான ₹2,580 கோடி திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து நிதி உதவி பெற உள்ளது. இந்த நிதியை பெறுவது தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசுக்கு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார நிதித் துறைக்கு (DEA) பரிந்துரை செய்துள்ளது. நிதி ஆயோக் உடனான ஆலோசனை முடிந்த பிறகு, இந்த திட்டம் DEA ஆல் ADB க்கு நிதியுதவிக்காக அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎம்ஆர்எல், எதிர்காலத்தில் நகரத்தில் மெட்ரோ நெட்வொர்க்கில் எதிர்பார்க்கப்படும் தேவை மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை ஆதரிக்க முயல்வதால், அதன் வரவிருக்கும் நெட்வொர்க்கில் தற்போதைய 4-பெட்டி ரயில்களுக்குப் பதிலாக 6-கோச் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. தலா 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை வாங்க திட்டமிட்டு, ரோலிங் ஸ்டாக் செலவு, டிப்போ அதிகரிப்பு, சிக்னலிங், ஸ்டேஷன்களில் மாற்றங்கள் போன்றவற்றின் விலை எல்லாவற்றையும் அடிப்படையாக வைத்து பட்ஜெட் தொகை ₹2580 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்குத்தான் ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து நிதி உதவி பெற உள்ளது.












Click it and Unblock the Notifications