தமிழக அரசின் மினி கிளினிக் திட்டம் இன்று தொடக்கம்... 2,000 இடங்களில் செயல்பட ஏற்பாடு..!
சென்னை: தமிழக அரசின் மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகம் முழுவதும் 2,000 இடங்களில் மினி கிளினிக் செயல்படும் வகையில் சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மினி கிளினிக் மூலம் சாதாரண காய்ச்சல், தலைவலி, உள்ளிட்ட உடல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற முடியும்.
கடந்த செப்டம்பர் மாதம் மினி கிளினிக்குள் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில் இன்று அதற்கான தொடக்க விழா நடைபெறுகிறது. மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர் -ஒரு செவிலியர்- ஒரு உதவியாளர் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து பகுதி மக்களுக்கும் மருத்துவ சேவை எளிதாக கிடைக்கும் வகையில் இந்த மினி கிளினிக் திட்டத்தை தமிழக அரசு தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் இரண்டாயிரம் இடங்களில் திறக்கப்படும் நிலையில், சென்னையில் மட்டும் 200 இடங்களில் மினி கிளினிக் அமைக்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு 'முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டம்' என தமிழக அரசு பெயர் சூட்டியுள்ளது. இந்த மினி கிளினிக்கில் பணியாற்றுவதற்காக புதிதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களை அரசு பணிக்கு எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை பொறுத்தவரை ராயபுரம், மயிலாப்பூர், வியாசர்பாடி ஆகிய மூன்று இடங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இன்று முதற்கட்டமாக சென்னையில் 20 இடங்களிலும் படிப்படியாக மீதமுள்ள இடங்களிலும் மினி கிளினிக் அமைக்கப்படவுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications