அசத்துதே தமிழக அரசு.. 3 நாள் தான் டிரைனிங்! அப்பறம் உங்க வாழ்க்கையே மாறிடும்! மிஸ் பண்ணாதீங்க!
சென்னை: தமிழ்நாடு அரசு இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றம் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொள்பவ்பர்களுக்கு அரசு சான்றிதழும் வழங்கப்படவுள்ளது
தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் இளைஞர்கள் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. சாட் ஜிபிடி பயிற்சி, இணையதளத்தை உருவாக்குதல் மற்றும் பல்வேறு தொழில்கள் குறித்து பயிற்சியோடு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் சென்னையில் தினை வகைகளை கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி 3 நாட்கள் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட ஆண்கள், பெண்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு பயிற்சி
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 25.11.2025 முதல் 27.11.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
தினை பேக்கரி பயிற்சி
இப்பயிற்சியில் பேக்கரி பொருட்களின் கோதுமை வெண்ணெய் பிஸ்கட், தினை பால் பிஸ்கட், தினை ஜீரா குக்கீ, செரிமான குக்கீகள், ராகி நட்ஸ் குக்கீகள், மல்டிமில்லட் குக்கீகள், சோளம் சாக்லேட் பிஸ்கட், கம்பு நெய் பிஸ்கட், கருப்பு கவுனி பாதாம் குக்கீ, தினை ஓமம் பிரவுன் குக்கீ, பிரவுன் ஓமம் பிரவுன் குக்கீ, ராகி, சாமாமில் பிரவுன் குக்கீ ஃபட்ஜி பிரவுனி, கருப்பு கவுனி பிரவுனி, டபுள் சாக்லேட் பிரவுனி, கோதுமை வெண்ணிலா பஞ்சு, ராகி சாக்லேட் கேக், தினை வாழை கேக், சோளம் கேரட் இலவங்கப்பட்டை கேக், முழு கோதுமை ரொட்டி, ராகி தினை ரொட்டி, மல்டிமில்லட் ரொட்டி, பால் ரொட்டி வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள். மேலும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.
தொழில் மேம்பாட்டு திட்டம்
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
அரசு சான்றிதழ்
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 8668102600/99436 85468 600 032. முன்பதிவு அவசியம். அரசு சான்றிதழ் வழங்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications