உங்க கணவருக்கே கடன் கொடுக்கலாம்.. "சூரரைப் போற்று" பொம்மி மாதிரி சம்பாதிக்கணுமா? சூப்பர் சான்ஸ்
சென்னை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 4 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம், அட்வான்ஸ் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 28.10.2025 முதல் 31.10.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் மூலம் இளைஞர்கள், பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சாட் ஜிபிடி பயிற்சி, இணையதளத்தை உருவாக்குதல் மற்றும் பல்வேறு தொழில்கள் குறித்து பயிற்சியோடு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் சென்னையில் அட்வான்ஸ் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி 4 நாட்கள் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட ஆண்கள், பெண்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசு பயிற்சி
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 4 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம், அட்வான்ஸ் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 28.10.2025 முதல் 31.10.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
பேக்கரி பயிற்சி
இப்பயிற்சியில் பேக்கரி பொருட்களின் மூலப்பொருள், பிராண்ட் போன்றவற்றில் கிடைக்கும் தன்மை, ப்ரூக்கீஸ், டிரிபிள் சாக்லேட் பிரவுனி, நுடெல்லா பிரவுனி, கருப்புகோவ்னி மில்லட்ஸ் பிரவுனி, ப்ளாண்டி, பிரெஞ்ச் மாக்கரூன்கள், மாவா கேக், சீஸ் கேக், ட்ரெஸ் லெச்ஸ் கேக் ட்ரீம் கேக், மில்க் கேக், குரோசண்ட், ரெட் வெல்வெட் கேக், திருமண கேக், டயர் கேக், சாக்கோ ட்ரஃபில் கேக்சிகல்ஸ் மற்றும் கேக் பாப்ஸ் கேக் ஐசிங் உத்திகள், ஃபாண்டன்ட் அடிப்படை வெண்ணெய் கிரீம் வகைகள் மற்றும் ஃப்ரோஸ்டிங், பீட்சா, டஃப் நட், பர்கர் வகைகள் கேக் வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள். மேலும் தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்கான விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும். அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.
பெண்கள் பயிற்சி
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு திட்டம்
மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 8668102600/8072914694 600 032. முன்பதிவு அவசியம்:அரசு சான்றிதழ் வழங்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications