நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. தனிஷ்க் ஜுவல்லர்ஸ் ஓனரே தமிழக அரசு தான்! பலருக்கும் தெரியாத உண்மை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட நிஷாந்த் தர்மபுரியில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மதுரை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த நிலையில் கொள்ளை நடைபெற்ற தனிஷ்க் நகைக்கடையின் முக்கிய உரிமையாளரே தமிழ்நாடு அரசுதான் என்பது பலருக்கும் தெரியாது.

மதுரையில் சமீபத்தில் திறக்கப்பட்ட தனிஷ்க் ஜூவல்லரி நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து தனிப்படை போலீசார் கடந்த 5 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tanishq Jewellery

முதற்கட்ட விசாரணையில் மதுரையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரும் பிரபல டிராவல் விலாக்கருமான நிஷாந்த் என்பவர் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் இந்த கொள்ளைக்கு நிஷாத்தின் காதலியும் யூட்யூபருமான மீனாட்சி, அவரது தந்தை சுரேஷ் ஆகியோரும் உடந்தையாக இருந்தது தெரியவந்து,

முதற்கட்டமாக நிஷாந்தின் காதலி மீனாட்சி, நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் நகைகளை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்றது. இது ஒரு புறம் இருக்க நிஷாந்தை கைது செய்ய தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு இன்று நிஷாந்த் தர்மபுரியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

நிஷாந்தின் செல்போன் சிக்னலை வைத்து தொடர்ந்து போலீசார் அவரை ட்ராக் செய்து வந்த நிலையில் தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர். போலீசார் பெங்களூரு வருவதை அறிந்த நிஷாந்த் சேலம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்து வந்த நிஷாந்தை பார்த்து சந்தேகம் அடைந்த நடத்துனர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தர்மபுரி அருகே சேஷம்பட்டி பகுதியில் அதியமான் கோட்டை காவல்துறையினர் பேருந்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது பேருந்தின் ஜன்னல் வழியாக தப்பி ஓட முடிகின்ற நிஷாந்தை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார் தற்போது மதுரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதை அடுத்து விரைவில் நகைகள் முழுவதுமாக மீட்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கொள்ளை நடந்த தனிஷ்க் நகைக்கடையின் முக்கிய உரிமையாளரே தமிழ்நாடு அரசுதான் என்ற தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதாவது தனிஷ்க் நகைக்கடை நிறுவனத்தின் தாய் நிறுவனமான டைட்டனில் தமிழக அரசுதான் டாட்டா குழுமத்தை விட அதிக பங்குகளை வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. டைட்டன் நிறுவனம் 1984 ஆம் ஆண்டு டாடா குழுமமும் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோவும் இணைந்து தொடங்கிய கூட்டு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய சூழலில் இந்த நிறுவனத்தில் தமிழக அரசின் பங்காக 27.88 சதவீதமும், டாடா குழுமத்தின் பங்காக 25.2% பங்குகளும் உள்ளது. இது டாடா குழுமத்தை விட சுமார் 2 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டைட்டன் நிறுவனத்தில் டாடா குழுமத்தை விட தமிழக அரசுக்கு தான் அதிக பங்குகள் இருக்கிறது. மும்பை பங்குச் சந்தையில் வெளியிடப்பட்டுள்ள பங்குதார விபரங்களிலும் இது குறிப்பிடத்தக்கது இதன் மூலம் இந்த நிறுவனத்தின் நிர்வாக குழுவிலும் தமிழக அரசு அதிகாரிகள் தான் இருக்கின்றனர்.

அப்போதைய சூழலில் டைட்டா நிறுவனத்தின் தலைவராக முருகானந்தம் இருந்தார். இவர் தமிழக அரசால் நியமிக்கப்பட்டவர். இதேபோல இயக்குனர்களாக ககர்லா உஷா, அருண் ராய் ஆகியோரும் இருந்தனர். இவர்கள் அனைவருமே ஐஏஎஸ் அதிகாரிகள் என்பதும், தமிழக கேடர் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இப்போது தலைவராக விஜயகுமார் ஐஏஎஸ், இயக்குனர்களாக கார்த்திகேயன் ஐஏஎஸ், விவேகானந்தன் ஐஏஎஸ் ஆகியோர் உள்ளனர்.

டைட்டன் நிறுவனம் 1984 ஆம் ஆண்டு டாட்டா குழுமமும் தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும் இணைந்து தொடங்கியது. அப்போது கடிகாரம் தயாரிப்பதற்கான உரிமம் பெற்றிருந்த சில நிறுவனங்களில் டிட்கோவும் ஒன்றாக இருந்தது. அப்போது மத்திய அரசின் எதிர்ப்பு காரணமாக டாடா குழுமத்தின் பெயர்கள் நேரடியாக இணைக்கப்படவில்ல.

முதலில் டிட்கோவுக்கும் குவெஸ்டர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்துக்கும் இடையே கூட்டு நிறுவன ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. குவெஸ்டர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் ஒருவராக ஜெர்க்சஸ் தேசாய் இருந்தா பின்னர் இவர் டைட்டன் நிறுவனத்தின் முதல் நிர்வாக இயக்குனரானார் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு பிறகு டைட்டன் நிறுவனத்தின் துணை நிறுவனமாக தனிஷ்க் ஜுவல்லரி உருவாக்கப்பட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நகைக்கடைகள் திறக்கப்பட்டது அந்த வகையில் டைட்ட நிறுவனத்தின் குழந்தைதான் தனிஷ்க். அந்த நிறுவனத்துக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+