Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷனில் வரப்போகும் புதிய பொருள்.. இது மட்டும் நடந்தால் மொத்தமாக எல்லாமே மாறும்.. அரசின் செம பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு ரேஷன் கடைகளில் விரைவில் புதிய பொருள் ஒன்றை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு ரேஷன் கடைகள் தொடர்பான முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு பொருட்களை சப்ளை செய்யும் நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பாக முக்கியமான உத்தரவு ஒன்று சென்றுள்ளது.

Tamil Nadu government planning to sell Coconut oil on Ration Shop soon

தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன.

பிற மாநில அரசுகளும் இந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசு, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொருத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது.

இந்த பொருட்கள் எடை மாறக்கூடாது, ஏமாற்ற கூடாது என்பதால் அதை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

ரேஷன் பொருட்களில் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. உணவு பொருட்கள் சுத்தமாக கிடைக்க வேண்டும். எடையில் ஏமாற்றம் செய்ய கூடாது என்பதால் பொருட்களை நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

அரிசி, சர்க்கரை. கோதுமை உள்ளிட்ட பொருட்களை பாக்கெட்டுகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை எடையில் மாற்றம் இருக்காது. பொருட்களும் பூச்சி இல்லாமல் சுத்தமாக இருக்கும்.

புதிய உத்தரவு : ரேஷன் கடைகளுக்கு பொருட்களை சப்ளை செய்யும் நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பாக முக்கியமான உத்தரவு ஒன்று சென்றுள்ளது. அதன்படி நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பாக வழங்கப்படும் பொருட்களை நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் ஒரு முறை எடை பார்க்க வேண்டும்.

ரேஷன் கடைகளுக்கு வந்ததும் ஒரு முறை எடை பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நுகர்பொருள் வாணிபக்கழக பொருட்களில் எடை குறைவதாக வைக்கப்படும் புகார்கள் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

புதிய பொருள்: அதேபோல் ரேஷன் கடைகளில் புதிதாக இனிமேல் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. தேங்காய் எண்ணெய் நேரடியாக விவசாயிகளிடம் வாங்கி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில் இதற்கான அறிவிப்புகள் பிரச்சாரத்தில் திமுகவினர் மூலம் கொடுக்கப்பட்டது. தற்போது அதற்கான சாத்திய கூறுகளை தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து வருகிறதாம்.

அரிசி வழங்கும் திட்டம்: இன்னொரு பக்கம் மத்திய அரசின் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் பல்வேறு மாநிலங்களில் வரும் மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது அரிசியை செறிவூட்டி, அதிக சத்துக்களுடன் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டம் தமிழ்நாட்டிலும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3 கட்டமாக செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தை இன்னும் சில மாதங்களுக்குள் மொத்தமாக கொண்டு வருவோம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது

இந்த நிலையில்தான் ரேஷன் பொருட்கள் சரியாக கிடைக்கவில்லை, ரேஷன் ஊழியர்கள் ஊழல் செய்கிறார்கள், முறைகேடு செய்கிறார்கள் என்று தோன்றினால் அதை பற்றி புகார் அளிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்காக 18004255901 என்ற புகார் எண் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு ரேஷன் தொடர்பான புகார்களை அளிக்க முடியும்.

சமீபத்தில் கூட அரிசி பற்றாக்குறை புகார் வந்தால், 24 மணி நேரத்தில் இதில் பறக்கும்படை ஆய்வு செய்ய வேண்டும். அரிசி திருடப்பட்டுள்ளதா என்பதை மண்டல அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாகவே தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இது போக தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் திருட்டுகளை தவிர்க்க க்யூஆர் கோடு வசதியை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரிசி மூட்டைகள், சர்க்கரை மூட்டைகள், பருப்பு பாக்கெட்டுகள் அனைத்திலும் தமிழ்நாடு அரசின் முத்திரை இடம்பெறும்.

அதற்கு மேலே க்யூ ஆர் கோடு இடம்பெறும். இந்த க்யூ ஆர் கோடு உள்ள மூட்டைகளை யாரும் வாங்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாராவது திருடி வெளியே விற்றால் இதை வாங்க கூடாது.

வரும் நாட்களில் தமிழ்நாடு முழுக்க கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரேஷன் பொருட்கள் திருடப்படுவது குறையும். ரேஷன் பொருட்களை மக்கள் வாங்காத நிலையில், அதை வாங்கியதாக கூறி ஏமாற்றி வெளியே விற்கும் பழக்கம் குறையும்.

வாங்கப்படாத ரேஷன் பொருட்கள் மீண்டும் கிடங்கிற்கே செல்லும் முறையை கொண்டு வர முடியும். தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் பொருட்கள் அடிக்கடி திருடப்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு செல்ல வேண்டிய பொருட்களை சிலர் திருடி அண்டை மாநிலங்களில் விற்று வருகிறார்கள். அது முற்றிலுமாக தடுக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+