ஸ்டாலின் மாஸ்டர்பிளான்.. அரசு ஊழியர்கள் அமோகமாக வாழப்போறாங்க.. யாருக்கெல்லாம் வருது பழைய பென்ஷன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. தற்போது இந்த ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால் யாரெல்லாம் நேரடியாக பலன் அடைவார்கள் என்று பார்க்கலாம்.

கடந்த 01.04.2003 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) 01.01.2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.

old pension scheme pension

எனினும் மாநில அரசுப்பணியாளர்கள் 01:04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், 24.01.2025 அன்று ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது.

மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட கீழ்க்காணும் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

ககன்தீப்பிபேடி. இ.ஆ.ப. கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கே.ஆர்.சண்முகம். முன்னமன் இயக்கு. Madras School of Economics, பிரத்திக் தான். இ.ஆ.ப. அடங்கிய குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையினை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் கர்நாடகாவில் நிறைவேற்றம்: சமீபத்தில்தான் கர்நாடகாவில் பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அம்மாநில தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் முதலமைச்சர் சித்தராமையா இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இதை செயல்படுத்த முடியாது என்று முன்பு நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையிலேயே தெரிவித்து இருந்தார்.

பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் கடந்த 2022-ம் வருடம் பேசுகையில், தனிநபர் ஒருவருக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. அதேநேரம் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தனிநபர் ஒருவருக்கு ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது"என்று தெரிவித்தார்.

அவரின் இந்த பேச்சு அரசு ஊழியர்கள் இடையே பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் தற்போது சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது.

தங்கம் தென்னரசு: தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தொழிற் சங்கங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில்தான் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் தாக்கல் செய்ய உள்ள அடுத்த பட்ஜெட்டில் (இந்த பட்ஜெட்டில் வாய்ப்பில்லை) இந்த அறிவிப்பை வெளியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் உறுதி: ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின், பழைய ஓய்வூதியத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என இன்று உறுதியளித்தார் என்று ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. அரசு ஊழியர்கள் ஆளும் திமுக மீது அப்செட்டில் இருப்பதாக கூறப்படும் நிலையில்தான் திமுக அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி முன்னதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில், இது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. அரசு ஊழியர்களின் நலனில் மாநில அரசு எப்போதும் கவனமாக இருக்கும்.இது தொடர்பாக பலர் எங்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தேவையான நடவடிக்கையை நாங்கள் விரைவில் எடுப்போம் என்று தங்கம் தென்னரசு கூறி உள்ளார். அமைச்சர் பிடிஆர் போல பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர மாட்டோம் என்று மறுக்காமல் தங்கம் தென்னரசு அளித்த பதிலால், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

யாருக்கெல்லாம் பலன்:

இதனால் யாரெல்லாம் நேரடியாக பலன் அடைவார்கள் என்று பார்க்கலாம்.

1. முன்னாள் ஆசிரியர்கள்.

2. அரசு துறையில் பல குரூப் ரேங்குகள் கீழ் பணியாற்றியவர்கள்.

3. அரசு கீழ் நேரடியாக இல்லாமல் கார்ப்பரேஷன் கீழ் பணியாற்றியவர்கள்.

4. அரசு ஓய்வூதியம் பெற தகுதி பெற்ற ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோர் இதனால் பலன் அடைவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+