ரேஷனில் மாற்றம்? குடும்ப அட்டைதாரர்களுக்கு விரைவில் குட் நியூஸ்.. இனி ஒருத்தரும் "கை" வைக்க முடியாது
சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் அளவு மற்றும் ஊழல்கள் குறித்த புகார்கள் அவ்வப்போது வெளிவரும்நிலையில், புதிய நடைமுறை ஒன்று விரைவில் கொண்டுவரப்போவதாக கூறுகிறார்கள்.
தமிழகத்தின் ரேஷன் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. மேலும், பொங்கல் பரிசு, மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட நிதியுதவிகளும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன,

அதேசமயம், சில ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடப்பதாக புகார்களும் கிளம்புகின்றன.. அதாவது, ரேஷன் அட்டைதாரர்கள் சிலர், தங்களது ரேஷன் அட்டைகள் மூலமாக வழங்கப்படும் பொருட்களை வாங்குவதில்லையாம்.. இதனால் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் மளிகை பொருட்கள் தேங்கி விடுவதால், அரசிற்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.. இந்த பொருட்களை ஊழியர்களில் சிலர் கள்ளத்தனமாக விற்றுவிடுகிறார்களாம்.
உத்தரவு: அதனால்தான், ரேஷன் பொருட்களை கடைகளில் தேங்கவிடாமல், உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல, தமிழக ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் வழங்குமாறு ஊழியர்களுக்கு, உணவு துறை பலமுறை உத்தரவிட்டும்கூட, அதை, பல ஊழியர்கள் பின்பற்றுவதில்லையாம்... சில சமயம், கடையில் பொருள் இல்லை என்று கார்டுதாரர்களை திருப்பி அனுப்பியும் விடுவதால், இந்த முறைகேடுகளை தடுப்பதற்காகத்தான், டிஎன்இபிடிஎஸ் என்ற மொபைல் ஆப்-ஐ உணவு வழங்கல் துறை அறிமுகம் செய்துள்ளது.
துல்லியம்: இந்த ஆப்பை ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் செல்போனில் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். அந்த செயலியில், கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், முகவரிக்கு ஒதுக்கிய ரேஷன் கடையில் உள்ள உணவு பொருட்களின் இருப்பு, முந்தைய பரிவர்த்தனைகள் உள்ளிட்ட விபரங்களை, துல்லியமாக அறிய முடியுமாம். இதனால், ரேஷன் பரிவர்த்தனை உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ள முடியும் என்று உணவு மற்றும் கூட்டுறவு துறை அறிவுறுத்தி வருகிறது.
இப்படித்தான் உத்தரபிரதேச மாநிலத்திலும் ரேஷன் கடைகள் தொடர்பான புகார்கள் அதிகமாகி வருகின்றன.. குறிப்பாக, ரேஷன் பொருட்களில் ஊழல் நடைபெறுவதாகவும், இந்த ஊழலில் ரேஷன் கடைகளின் ஊழியர்கள் பங்கேற்பதாகவும் யோகி அரசுக்கு தொடர் புகார்கள் வந்தவண்ணம் இருந்தது..
ரேஷன் பொருட்கள்: இதைத்தவிர, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் எடை குறைவதாகவும், பொருட்கள் சரிவர வழங்கப்படுவதில்லையென்றும் பொதுமக்களிடமிருந்தே புகார்கள் வந்தன..
இதையடுத்து, அம்மாநில அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது.. உ.பி.யின் ஷாம்லி மாவட்ட ரேஷன் கடைகள் அனைத்திலும் EWS என்ற மின் எடை அளவு முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறதாம்.
சாப்ட்வேர்: இதன்படி, ரேஷன் கார்டுதாரர்களின் அளவுகள் EWS சாப்ட்வேரில் பதிவு செய்யப்பட்டுவிடும்.. E-POS இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட சாப்ட்பேரில், ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கைவிரலை வைத்தாலே போதும்.. அவர்களுக்கான ஒதுக்கப்பட்ட சரியான எடை மின் எடை அளவீடு மூலம் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்... இதனால், ரேஷன் கடைகளின் ஊழியர்களும் ஊழல் செய்ய முடியாது..
இந்த முறையானது இதுவரை 434 கடைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இதே கொண்டுவரப்படும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, இந்த திட்டம், வெற்றிகரமாக முடிந்தால், பிற மாநிலங்களிலும் தீவிரமாக அமல்படுத்த போவதாக சொல்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications