"அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை!" முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு.. அடுத்த வருடம் முதல் அமல்
சென்னை: அடுத்த வருடம் முதல் பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு உயர் கல்வி அல்லது பட்டயப்படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ 1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த திட்டத்திற்கு ரூ 698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு புதுமைப் பெண் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

ராயபுரத்தில் தொடக்க விழா
இதன் தொடக்க விழா சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் கலந்து கொண்டார். இந்த உதவித் தொகையை பெற சுமார் 4 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

புதுமைப் பெண்
இந்த விழாவில் புதுமைப் பெண் என அச்சிடப்பட்ட டெபிட் அட்டைகளை முதல்வர் ஸ்டாலின், மாணவிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் இந்த புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் 1 லட்சம் மாணவிகளுக்கு முதற்கட்டமாக வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ 1000 செலுத்தப்படும்.

கல்வியின் துணை
கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல துடிக்கும் மாணவிகளுக்கு தந்தையின் பேரன்போடு என்றும் துணை நிற்பேன். மகள்களை படிக்க வைக்க காசு இல்லையே என பெற்றோர் கவலை கொள்ள கூடாது. சென்னை ராயபுரம் பாரதி கல்லூரியை 3 அடுக்கு கட்டடமாக கட்ட உத்தரவிட்டுள்ளேன்.

ஸ்மார்ட் கிளாஸ்
இந்த திட்டத்தின் மூலம் குழந்தைத் திருமணங்கள் குறைந்து மாணவிகள் உயர் கல்வி படிப்பது அதிகரிக்கும். தமிழகத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் ரூ 150 கோடியில் ஒவ்வொரு பள்ளியிலும் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்படும் என்றார். இந்த ரூ. 1000 உதவித் தொகை மாதந்தோறும் 7-ஆம் தேதி மாணவிகளின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும். தமிழ்நாடு, டெல்லி தவிர பிற பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள் சரியில்லை, வசூல்தான் நடக்கிறது என டெல்லி முதல்வர கெஜரிவால் குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications