யாரையும் காப்பாற்ற மாட்டோம்.. புத்தகக் கொள்முதலில் பெரும் முறைகேடு! ஹைகோட்டில் சொன்ன தமிழக அரசு
சென்னை: புத்தக கொள்முதல் வழக்கில் யாரையும் காப்பாற்ற மாட்டோம் எனவும் இந்த முறைகேட்டில் முதல் குற்றவாளியாக அகல் விளக்கு பதிப்பகத்தின் மோகன் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்ற கிளையில் விளக்கம் அளித்துள்ளது மேலும் மதுரை சென்னை உள்ளிட்ட பொது நூலகங்களை கொள்முதலில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும் அரசு கூறியுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த ராமசுப்பு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், "கடநத 2024ல் தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கோவை பெரியார் அறிவுலக நூலகம் உட்பட கோவை, திருச்சி, சேலம், கடலூர், நெல்லை ஆகிய மண்டல நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. உத்தரவுகள் எதுவும் முறையாக பின்பற்றப்படாமல் இந்த புத்தகக் கொள்முதல் நடைபெற்றுள்ளது.எனவே இதற்கு காரணமான பள்ளிக்கல்வித்துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், சுமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், "இந்த வழக்கில் சில அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். பொதுநூலக இயக்குனர் மாற்றப்பட்டுள்ளார" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மதுரை எம்.பி சு.வெங்கடேசன் நான் எனது பணிகளை எப்படி செய்ய வேண்டும் என அறிவுறுத்துவது போல பதிவிட்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு ரயில் நிலையத்திலிருந்து செல்லும் போது, உயர்ரக காரில், ஆடம்பர உடையில் ஒருவர் இறங்கினார். யாரோ என நினைத்த போது, எம்.பி வெங்கடேசன் வந்தார். அவர் முதல் வகுப்புக்கு செல்ல நான் சாதாரண வகுப்பில் பயணித்தேன். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் இப்படி ஆடம்பரமாக இருக்கிறார்" என தெரிவித்தார்.
அரசுத்தரப்பில், " நீதிமன்ற உத்தரவின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விட்டது. இன்று முதல் தகவல் அறிக்கை விபரங்கள் வெளியிடப்படும்" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், "இதனை முறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? என்பது முக்கியமானது என தெரிவித்தனர்.
அரசுத் தரப்பில், " இந்த நிகழ்வு மிகவும் துரதிஷ்டவசமானது. AI மூலம் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றம் வழங்கும் வழிகாட்டல்களையும் கருத்தில் கொள்ள அரசு தயாராக உள்ளது. 30 கோடி மதிப்பில் புத்தகங்கள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
மேலும்,," 3 ஆண்டுகளில் 2 பதிப்பகங்களுக்கும் சேர்த்து 1 கோடியே 74 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று அகல்விளக்கு பதிப்பகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்" என தெரிவிக்கப்பட்டது.
மேலும், சிக்மா தொடர்பாக தற்போது வரை விசாரணை தொடங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், விசாரணயில் முன்னாள் இயக்குநர் அளித்த விபரங்களையும் கருத்தில் கொள்ளுங்கள். கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவில் இருக்கும் கடவுளின் பெயர். குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்" என தெரிவித்து, வழக்கில் கூடுதல் விபரங்களை வழங்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கை வெள்ளிக்கிழமை காலை பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.




Click it and Unblock the Notifications
