ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு.. முதல்வர் உட்பட யாரும் பங்கேற்கப் போவதில்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசு தினத்தை ஒட்டி, நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ் பவனில் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு. காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே புறக்கணிப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அரசு சார்பில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் சார்பில், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் மாலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறும். வழக்கமாக இந்த விருந்தில் பங்கேற்க முதல்வர், அமைச்சர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில், நாளை ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவின் 76 வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

republic day 2025 mk stalin tn governor

இதையொட்டி, ஆளுநர் மாளிகையில் மாலை நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மீதான அதிருப்தியின் காரணமாக, கடந்தாண்டைப் போலவே இந்த ஆண்டும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

கடந்த ஆண்டு, குடியரசு தின விழா தேநீர் விருந்தில், முதல்வர் பங்கேற்காவிட்டாலும் அமைச்சர்கள் பங்கேற்றனர். சுதந்திர தின விழா அன்று நடைபெற்ற தேநீர் விருந்தில், தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு, குடியரசு தினத்தை முன்னிட்டு, நாளை ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு. அரசு சார்பில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்படுவதால், இந்த தேநீர் விருந்தில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பிலும் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+