11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. ஸ்டாலின் வந்த முதல்நாளே.. தலைமைச் செயலாளர் போட்ட உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன்படி நிதித்துறை செலவின செயலாளராக பிரசாந்த் மு வடநெரே, நிதித்துறை இணைச் செயலாளராக ராஜகோபால் சுன்கரா மற்றும் கூட்டுறவு மேலாண்மை இயக்குநராக கவிதா ராமு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசுப் பணியில் 3 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணியாற்றுவோர், இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதேபோல் சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல் நேரங்களில் அனைத்து நிலைகளிலும் இடமாற்றங்கள் செய்யப்படும். அந்த வகையில் கடந்த 3 மாதங்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்ச்சியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

ஜூன் மாதத்தில் மட்டும் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன்பின் ஜூலை மாதம் தொடக்கத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் மீண்டும் ஜூலை மாதத்தின் கடைசி நாளான இன்று மீண்டும் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் பிறப்பித்த உத்தரவில், நிதித்துறை செலவின செயலாளராக பிரசாந்த் மு வடநெரே, நிதித்துறை இணைச் செயலராக ராஜகோபால் சுன்கரா, நில அளவைத்துறை இயக்குநராக தீபக் ஜேக்கப், போக்குவரத்து, சாலை பாதுகாப்பு ஆணையராக கஜலட்சுமி, கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநராக கவிதா ராமு, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநராக சமீரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் மீன்வளத்துறை இயக்குநராக முரளீதரன், வருவாய் நிர்வாக ஆணையராக கிரண் குராலா, கோவை வணிக வரி இணை ஆணையராக தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், சென்னை வணிக வரி இணை ஆணையராக நாராயண சர்மா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் சுன்சோங்கம் ஐடக் சிருவுக்கு கூடுதலாக இயற்கை வளங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. உடல்நலம் காரணமாக ஓய்வில் இருந்த ஸ்டாலின், தலைமைச் செயலகம் வந்த முதல்நாளே இந்த உத்தரவு வெளியாகி இருக்கிறது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications