சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.2000 வழங்கும் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி

Google Oneindia Tamil News

சென்னை: வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார்.

தமிழக சட்டசபையின், பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, 110 விதியின் கீழ், கடந்த மாதம் 11ம் தேதி நடைபெற்ற அறிக்கை வெளியிட்டார், முதல்வர், எடப்பாடி பழனிசாமி.

Tamil Nadu government unveiled a poverty alleviation scheme

அதன்படி, வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2,000, சிறப்பு நிதியாக வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். கஜா புயல் மற்றும் வறட்சியால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அடேங்கப்பா.. ஆட்சியைப் பிடிக்கிறாரோ இல்லையோ.. பெரிய கொடி கம்பத்தைப் பிடிச்சுட்டாரே தினகரன்! அடேங்கப்பா.. ஆட்சியைப் பிடிக்கிறாரோ இல்லையோ.. பெரிய கொடி கம்பத்தைப் பிடிச்சுட்டாரே தினகரன்!

இந்நிலையில், இந்த திட்டத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று காலை தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தின்கீழ், நகர்பகுதிகளில் வசிக்கும் 25 லட்சம் பேருக்கும், கிராமப்பகுதிகளில் ‌வசிக்கும் 35 லட்சம் பேருக்கும் இந்த நிதி உதவி, அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

இதையொட்டி அடையாளமாக, சில பலனாளிகளுக்கு முதல்வர் தலைமைச் செயலகத்தில், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

English summary
The Tamil Nadu government unveiled a poverty alleviation scheme to dole out Rs 2,000 towards every family categorised Below.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X