Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சத்தமில்லாமல் செய்த விஷயம்.. தமிழக அரசின் சூப்பர் திட்டம் .. மாசம் பிறந்தால் ரூ.7500!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக IAS/IPS தேர்வுக்குத் தயாராக விரும்பும் மாணவர்களுக்குத் மாதந்தோறும் ₹7500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குகிறது தமிழக அரசு. எனவே IAS/IPS தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 17ம் தேதிக்குள் நான் முதல்வன் வெப்சைட்டில் விண்ணப்பிக்க வேண்டும்.

IAS/IPS தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்கள் கவனத்திற்கு!

Tamil Nadu Government will give Rs.7500 per month for studying IAS IPS under Naan Muthalvan scheme

நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக IAS/IPS தேர்வுக்குத் தயாராக விரும்பும் மாணவர்களுக்குத் மாதந்தோறும் ₹7500 ரூபாய் வழங்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் பயனாளர்கள் 10.09.2023 அன்று நடைபெறவிருக்கும் மதிப்பீட்டுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு மாதம் ₹7500 ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.08.2023

விண்ணப்பிக்க கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்:
https://nmcep.tndge.org

மேலும் விவரங்களுக்கு : 9043710214 / 9043710211 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சி வகுப்புகள் ஏழை மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கிலும், உயர்கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கிலும் நான் முதல்வன் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது. கல்வி தொகை தொடங்கி, வேலைவாய்ப்பு வரை பல்வேறு விஷயங்களை தமிழக அரசு செய்து வருகிறது.

பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் அளிப்பதே நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இதற்காக https://naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், நாடு முழுவதும் உள்ள படிப்புகள், கல்லூரிகள், நுழைவுத் தேர்வுகள், உதவித் தொகை, கல்விக் கடன் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை குறித்த தகவல்கள் விரிவாக இருக்கின்றன.

மாணவர்கள் எமிஸ் எண் மற்றும் கடவுச் சொல்லை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும். மாணவர்கள் பயன்பெறுவது தவிர்த்து, பெரியவர்கள் வழிகாட்டியாகவும் தன்னார்வலராகவும் செயல்படலாம் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்து, அடுத்தடுத்த உயரத்தை எட்டிய மாணவர்களைப் பற்றிய குறிப்புகள் அவர்களின் புகைப்படங்களுடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதைக் கண்டு மாணவர்கள் உத்வேகம் அடையும் வகையில் உள்ளடக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்புக்குப் பிறகு மாணவர்கள் என்ன படிக்கலாம்? என்று இந்தப் பகுதியில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதில், பி.எஸ்.சி. தொடங்கி பி.டெக்., எம்.பி.பி.எஸ். வரை ஏராளமான படிப்புகள் 33 வகையாகப் பிரிக்கப்பட்டு, வரிசைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

கலை, அறிவியல், பொறியியல், இதழியல், இசை, நடனம் என ஒவ்வொரு படிப்பு குறித்த சுருக்கமான அறிமுகம், படிப்புக் காலம், அதிலேயே என்னென்ன மேற்படிப்புகள் உள்ளன? அந்தப் படிப்பு அளிக்கும் பணி வாய்ப்புகள் பற்றி விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல படிப்புகளும் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப கல்லூரிகள் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கின்றன தனியார் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகம், மத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள் கொடுக்கப்பட்டு இருக்கினற்ன. இவை ஒவ்வொன்றையும் மாநில வாரியாக க்ளிக் செய்து, தகவல்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ஐஐடி உள்ளிட்ட மத்தியக் கல்வி நிறுவனங்களுக்கான பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ,மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் உள்ளிட்ட 11 வகையான நுழைவுத் தேர்வுகள் குறித்த முழுமையான விவரங்கள் இந்தப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் அளிப்பதே நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று அரசு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் ஒற்றைச் சாளர முறையில் எளிதாக கல்விக் கடன் பெறுவது குறித்த வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு கொடுக்கப்பட்டுள்ள வித்யா லட்சுமி இணைய முகப்பின் வாயிலாக இந்தியாவில் உள்ள எந்த வங்கியிலும் மூன்று படிநிலைகளில் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்க முடியும். பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து, பதிவு செய்ய வேண்டும். தேவையான அனைத்து விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இறுதியாக, தேவை மற்றும் தகுதிக்கு ஏற்ப வங்கிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்புகள் என்னென்ன என்ற விவரங்களும் நான் முதல்வன் வழிகாட்டி பக்கத்தில் கொடுக்கப்பட்டுக்கிறது. இதில், ஒவ்வொரு வேலை குறித்த சிறிய விளக்கம், அதற்குத் தேவைப்படும் கல்வித் தகுதிகள், தேவையான திறன்கள், பணிசார் முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அந்த தகவல்களையும் நீங்கள் அறிய முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+