மறக்க முடியாத 2020: ஜீரோ கல்வி ஆண்டாக அரசு அறிவித்தால் மாணவர்களுக்கு சாதகமா? பாதகமா?
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பூஜ்ஜியம் கல்வி ஆண்டு அறிவிப்பது தொடர்பாக முதல்வருடன் கலந்து பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை: கொரோனா லாக்டவுன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் 2019-20ஆம் கல்வி ஆண்டினை பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். முதலில் பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவிப்பது பற்றி முதல்வரிடம் ஆலோசிக்கப்படும் என்று கூறிய அமைச்சர் திடீரென தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பினால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பமடைந்து வருகின்றனர். 2020ஆம் ஆண்டு மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமலேயே தேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். இதனால் என்னென்ன சாதக பாதகம் ஏற்படும் என்று பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் 8 கோடி பேரை பாதித்துள்ளது. இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கின. ரயில்கள் ஓடவில்லை. பேருந்துகள் ஓய்வெடுத்தன. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன.

தமிழ்நாட்டில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த பின்னரே லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. கடைசி தேர்வுகளை பல மாணவர்கள் எழுதாமல் தவிர்த்து விட்டனர் அனைவருக்கும் தனியாக தேர்வு வைக்கப்பட்டு பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 1 முதல் 10ஆம வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பினாலும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வந்தாலும் அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்புகள் சரியாக நடைபெறவில்லை. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. தனியார் பள்ளிகளில் மட்டும் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில்தான் 2019-2020ஆம் கல்வியாண்டினை பூஜ்ஜிய கல்வி ஆண்டாக அறிவிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறியுள்ளார். பள்ளிகள் செயல்படாத நிலையில் இந்த ஆண்டை பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிப்பது தொடர்பாக முதல்வருடன் பேசி முடிவு செய்யப்படும். முதல்வர் சூழ்நிலைக்கேற்ப என்ன முடிவு செய்கிறாரோ அந்த முடிவைத்தான் பள்ளிக் கல்வித்துறை அமல்படுத்தும். முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பிறகே முடிவுகள் வெளிப்படையாக அறிவிப்போம் என்று கூறியுள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
பூஜ்ஜிய கல்வி ஆண்டு என்பது தேர்வுகள் மற்றும் வகுப்புகள் உட்பட எந்தவொரு கல்வி நடவடிக்கைகளும் நடத்தப்படாத ஆண்டாகும். அவ்வாறு அறிவிக்கப்பட்டால், இந்த கல்வியாண்டில் மாணவர்கள் எந்த கல்வி நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்று பொருளாகும். இந்த ஆண்டை பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அரசு அறிவித்தால், 2019-2020 ஆம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு படித்தவர்கள் 2020- 2021 கல்வியாண்டு மீண்டும் ஒன்றாம் வகுப்பு படிப்பார்கள். இந்த கல்வியாண்டில் எந்த வகுப்பில் படிக்கிறார்களோ மீண்டும் அதே வகுப்பை வரும் 2020-2021 ஆம் கல்வியாண்டில் படிக்க வேண்டியிருக்கும்.
2020-2021ஆம் ஆண்டில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக இருக்கும். இந்த அறிவிப்பு மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினாலும், இதுதான் சரியான அறிவிப்பாக இருக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். எதுவுமே படிக்காமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பது சரியாக இருக்காது என்றும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
மொத்தத்தில் 2020ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மறக்கமுடியாத ஆண்டாக அமைந்து விட்டது.
இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நடப்பு கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி. பாடத்திட்டம் குறைக்கப்பட்ட போதிலும் தேர்வு நடைபெறும். இந்த கல்வியாண்டு பூஜ்யம் கல்வியாண்டாக இருக்க வாய்ப்பில்லை. பொதுத்தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார். தனியார் பள்ளி மாணவர்களாவது ஆன்லைன் மூலம் படித்து அவ்வப்போது தேர்வு என்ற பெயரில் எழுதி வருகின்றனர். அரசு பள்ளியிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தேர்வுகள் எதுவுமே இதுவரை நடத்தவில்லை. திடீரென்று பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டால் மாணவர்கள் அந்த தேர்வினை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதே பெற்றோர்களின் கேள்வியாகும். மொத்தத்தில் 2020ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மறக்கமுடியாத ஆண்டாக அமைந்து விட்டது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications