சிக்கலில் சட்டம் ஒழுங்கு! அமித்ஷாவை சந்தித்து.. சீக்ரெட் ரிப்போர்ட் கொடுக்கிறார் ஆளுநர் அர்லேக்கர்!
சென்னை: தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாளை மறுநாள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஆளுநர் ஆர்லேக்கர் சந்திக்கிறார். ஆளுநரிடம், சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து, அமித்ஷா அறிக்கை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, நவ.8ம் தேதியன்று 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 11 கொலை சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. குறிப்பாக இந்த 11 பேரில் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளரும் அடங்கும்.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப்பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இப்படி இருக்கையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை சீரியஸாக வெடித்திருக்கிறது. அதிலும் ஒரே நாளில் 11 கொலைகள் என்பதெல்லாம், ரொம்பவே மோசம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன. மறுபுறம் சிறுமிகள் காணாமல் போன சம்பவங்களும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அதிலும் செஞ்சி சிறுமி இன்னும் கிடைக்கவே இல்லை.
இது தவிர, பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ மீது கிளம்பிய குற்றச்சாட்டு, சட்டப்பேரவை துணைத் தலைவர் எம்.ரவிசங்கர் பொதுமக்களை தாக்கியதாக வந்த விமர்சனம்.. நியாமான போராட்டங்களுக்கு கூட தமிழக காவல்துறை உரிய அனுமதி கொடுக்காமல் இருந்தது என தமிழகம் மிகப்பெரிய சட்ட சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது.
சூழல் இப்படி இருக்கையில், நாளை மறுநாள் டெல்லியில் அமித்ஷாவை சந்திக்கிறார் ஆளுநர் அர்லேக்கர். இந்த சந்திப்பின்போது, சட்டம் ஒழுங்கு குறித்த அறிக்கையை அர்லேக்கர் கொடுப்பார் என்று சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
