தமிழ்நாடு சட்டசபை கலைப்பு.. ஆளுநர் மாளிகை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. முதலமைச்சராகும் விஜய்!
சென்னை: தமிழ்நாட்டின் 16வது சட்டசபை கலைக்கப்படுவதாக தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன்மூலம் விஜய் முதல்வராகி அவரது தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான நடைமுறை தீவிரமாகி உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு லோக்பவன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ''மே 5 ம் தேதியில் இருந்தே தமிழ்நாட்டின் 16வது சட்டசபை கலைக்கப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

சட்டசபை கலைப்பு என்றவுடன் வேறு எதையும் யோசிக்க வேண்டாம். இது பொதுவான, வழக்கமான நடைமுறை தான். ஒவ்வொரு சட்டசபை தேர்தலுக்கு பிறகும் சட்டசபை கலைக்கப்படுவது வழக்கம்.
தமிழக சட்டசபை தேர்தலில் புதிதாக வென்றவர்களின் எம்எல்ஏக்களாக பதவியேற்று மாநிலத்தில் புதிய ஆட்சியை கொண்டு வரும் வகையில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் வென்ற எம்எல்ஏக்களின் பெயர் பட்டியல் தேர்தல் ஆணையம் சார்பில் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஸ்டாலின் தேர்தல் தோல்வியால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தான் இன்று சட்டசபை கலைக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
தற்போது தமிழகத்துக்கு நடந்தது 17வது சட்டசபை தேர்தல். இந்த தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகள் படுதோல்வியடைந்துள்ளன. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. மெஜாரிட்டிக்கு 118 எம்எல்ஏக்கள் தேவை. விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதோடு, காங்கிரஸின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
நாளை இன்னும் சில கட்சிகளின் எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது. 2 கம்யூனிஸ்ட்கள், விசிக என 3 கட்சிகளின் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு கேட்டு விஜய் கடிதம் எழுதியுள்ளாார். இவர்கள் நாளை விஜய்க்கு ஆதரவு வழங்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நம்பிக்கையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளார்.
இந்நிலையில் தான் புதிய முதல்வர், இந்த தேர்தலில் வென்ற எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையில் செயல்படும் வகையில் முந்தைய 16வது சட்டசபை கலைக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டசபை இன்று கலைக்கப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications