வேலை கிடைக்கல.. இந்தி படிக்கலைனு இளைஞர்களுக்கு வருத்தம்! எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ஆளுநர்!
சென்னை: புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு மிகப்பெரும் தேவை உள்ளது எனவும், இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் மற்ற தென்னிந்திய மொழிகளை கற்க அனுமதிக்கப்படுவதில்லை என்று இளைஞர்கள் வேதனை தெரிவிப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை விவகாரம் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. கல்வித் துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் எனக் கூறியிருந்தார்.

இதற்கு தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன. குறிப்பாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் மும்மொழிக் கொள்கை என்பது இந்தி திணிப்பு இல்லை எனவும், விருப்பப்பட்ட பிற மொழிகளை கற்றுக் கொள்ளலாம் என பாஜக கூறி வருகிறது. மேலும் திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி பயிற்றுவிக்கப்படும், நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் இந்தி படிப்பதை திட்டமிட்டு திமுக தடுப்பதாகவும் பாஜக குற்றம் சாட்டுகிறது.
மேலும் தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை இருப்பதால் அது இந்தி திணிப்பு எனக் கூறி கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் இந்த விவகாரத்தில் மீண்டும் ஒரு மொழிப்போரை சந்திக்க தயார் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் மற்ற தென்னிந்திய மொழிகளை கற்க அனுமதிக்கப்படுவதில்லை என்று இளைஞர்கள் வேதனை தெரிவிப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இதுதொடர்பாக ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடினேன்.
ஏராளமான சிரமங்கள் மற்றும் முறைசார் தடங்கல்கள் இருந்தபோதிலும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் இவர்களின் நேர்மறையான ஆற்றலையும் தொழில்முனைவுத் திறனையும் காண்பது ஊக்கமளிப்பதாக இருந்தது. இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது.
தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள். இளைஞர்களிடையே காணப்படும் போதைப்பொருள்/போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் சிக்கல்கள் தீவிரமானவை. ஊடக தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட போராட்டங்களுக்கு மாறாக, தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது.
மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள். துரதிருஷ்டவசமாக ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது. மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்." என கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications