Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாக்பாட்! தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! யாருக்கு எவ்வளவு போனஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் அக். 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள ஊழியர்கள் அனைவருக்கும் 20% போனஸ் வழங்கப்படும் என்றும் இதன் மூலம் குறைந்தபட்சம் 8,400 ரூபாயும் அதிகபட்சம் 16,800 ரூபாயும் போனஸாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை என்றால் அது தீபாவளி தான். சாதி, மத, மொழி என வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து அனைவரும் கொண்டாடும் ஒரு பண்டிகையாகத் தீபாவளி இருக்கிறது.

diwali 2024 tamil nadu govt

போனஸ்: பெரும்பாலான நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு போனஸும் அறிவிக்கப்படும். தமிழக அரசு சார்பிலும் ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்கப்படும். அதன்படி இந்தாண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு 20% வரை மிகை ஊதியம், கருணைத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தகுதியுள்ள நிரந்தர ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 அதிகபட்சம் ரூ.16,800ஐ போனஸாக பெறுவார்கள். போனஸ் அறிவிப்பால் 2.75 தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள். அவர்களுக்கு ரூ.369 கோடி கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு எவ்வளவு போனஸ்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு போனஸ் தொகை 8.33% மற்றும் கருணைத் தொகையாக 11.67% என மொத்தம் 20% போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், உபரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யும் சி, டி பிரிவு தொழிலாளர்களுக்கு 8.33% குறைந்தபட்ச போனஸ் அத்துடன் 1.67% கருணைத்தொகை என மொத்தம் 10% போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றில் வேலை செய்யும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33% போனஸ் தொகை மற்றும் 1.67% கருணைத் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை செய்யும் தகுதியுள்ள சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33% போனஸ் தொகை வழங்கப்படும். இவை தவிரத் தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3000ஐ கருணைத் தொகையாக வழங்கப்படும். இதன் மூலம் தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8400ம் அதிகபட்சம் ரூ.16,800ம் பெறுவர்.

தனித்தனியே ஆணைகள் வெளியிடப்படும்: மொத்தத்தில் தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யும் 2.75 லட்சம் பேருக்கு 369.65 கோடி ரூபாய் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+