Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழில் மருத்துவம், என்ஜினியரிங் உயர்கல்வி படிப்பு நூல்கள்.. தமிழ்நாடு அரசு அசத்தல் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருத்துவம், என்ஜினியரிங் உள்ளிட்ட உயர்கல்வி சார்ந்த படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 120 புத்தகங்கள் தயாராக இருக்கிறது. இதனை வருகிற நவம்பர் மாதம் 25-ந் தேதி (திங்கட்கிழமை) சசிதரூர் எம்.பி. வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தி மொழியில் உத்தரபிரதேச மாநிலம் மொழி பெயர்த்து போல் தமிழகம் செய்துள்ளது.

மருத்துவம், என்ஜினியரிங் உள்ளிட்ட உயர்கல்வி சார்ந்த படிப்புகளுக்கான பாட நூல்கள் பொதுவாக ஆங்கிலத்தில் தான் இருக்கும். அதனை ஆங்கிலத்தில் தான் படிக்க வேண்டிய கட்டாயமாக இருக்கிறது. அதேநேரம் பல்வேறு அறிவியல் ஆங்கில நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு வரும் நிலையில், மருத்துவம், என்ஜினியரிங் படிப்புகளுக்கான நூல்கள் மட்டும் ஆங்கிலத்திலேயே இருந்து வந்தது.

neet engineering

ஆங்கில மொழியில் உள்ள நூல்களை உள்ளூர் மொழியில் மாற்றி, அதனை கற்பிக்க ஊக்குவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் தாய்மொழி கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரும் நிலையில், அதேபோன்று பின்பற்றுவதை அரசு விரும்புகிறது. மருத்துவம், என்ஜினியரிங் உள்பட பல்வேறு உயர்கல்வி நூல்களை தாய்மொழியில் படிக்கும் போது, அதை புரிந்து கொண்டு, படிக்க அதிக வாய்ப்பு இருப்பதால் மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு அதிகமாக இருந்தது.

இந்நிலையில் மத்திய அரசு அறிவித்த திட்டத்தை முதல் ஆளாக உத்தரப்பிரதேச அரசு செயல்படுத்தியது. மருத்துவம், என்ஜினியரிங் உள்ளிட்ட உயர்கல்வி சார்ந்த படிப்புகளுக்கான பாட நூல்களை இந்தி மொழியில் உத்தரபிரதேச மாநிலம் மொழி பெயர்த்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இதேபோல் தமிழில் மொழிப்பெயர்க்கும் பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வந்தது.

அதன்படி, மருத்துவப்படிப்பில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான 5 புத்தகங்கள் கடந்த 2022-ம் ஆண்டில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. இதில் மருத்துவ உடற்செயலியல் உள்ளிட்ட 2 புத்தகங்கள் அதிக பக்கங்களையும், 3 புத்தகங்கள் குறைந்த பக்கங்களையும் கொண்டவையாக இருந்தது. இதனால் மருத்துவ உடற்செயலியல் புத்தகம் முதலில் வெளியிடும் போது, முதல் தொகுதி மட்டும் வெளியிடப்பட்டது. தற்போது அதன் 2-வது தொகுதியையும் சேர்த்து முழு புத்தகமாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு 36 மருத்துவக்கல்லூரிகள், நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

நடப்பாண்டில் மருத்துவப்படிப்புக்கான 700 முதல் 800 பக்கங்களை கொண்ட 'மருத்துவ நுண்ணுயிரியல்', 'மகப்பேறு மருத்துவம்' ஆகிய 2 புத்தகங்கள், என்ஜினியரிங் படிப்புக்கான 4 புத்தகங்கள் தமிழ்வழியில் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல் அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட உயர்கல்வி சார்ந்த படிப்புகளுக்கான ஆங்கில வழி புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பாடநூல் கழகம் சார்பில் ஆங்கில இலக்கியங்கள் தமிழிலும், தமிழ் இலக்கியங்கள் ஆங்கில மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் 120 புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு தயார்நிலையில் இருக்கிறது. வருகிற நவம்பர் மாதம் 25-ந் தேதி (திங்கட்கிழமை) சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இந்த புத்தகங்களை சசிதரூர் எம்.பி. வெளியிட உள்ளதாகவும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அதிகாரிகள் கூறினார்கள்.

இதுபோன்ற உயர்கல்விச் சார்ந்த 200 பாடப்புத்தகங்களை ஒவ்வொரு ஆண்டும் மொழி பெயர்த்து வெளியிட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இலக்கு நிர்ணயித்து பணிகளை மேற்கொண்டு வருகிறதாம். தற்போது வரை 120 புத்தகங்கள் மொழி பெயர்க்கும் பணிகள் முடிந்து நவம்பரில் வெளியிட இருப்பதாகவும், மீதமுள்ள புத்தகங்கள் வருகிற ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்குள் வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+