2025ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மொத்தம் எத்தனை நாள் லீவு தெரியுமா
சென்னை: 2025ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி சனி, ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து அடுத்தாண்டு மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறையாக உள்ளன. குறிப்பாக அடுத்தாண்டு தீபாவளி அக். 20ம் தேதி திங்கள்கிழமை வருவதால் லாங் வீக் எண்ட்டாக வரும் என்று இப்போதே குஷியாகிவிட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சார்பில் பொது விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். சனி, ஞாயிற்று அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற விடுமுறை தினங்கள் குறித்த தகவல்கள் இதில் இருக்கும்.

விடுமுறை நாட்கள்: இதற்கிடையே இப்போது 2025ம் ஆண்டிற்கான பொது விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், தமிழக அரசின் கீழ் உள்ள எல்லா அலுவலகங்களும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளுடன் இந்த 24 நாட்களும் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பதே விதியாகும்.
அதன்படி பார்க்கும் போது 2025ம் ஆண்டில் தீபாவளி என்பது அக். மாதம் 20ம் தேதி வருகிறது. இது திங்கள்கிழமை என்பதால் அந்த வாரம் லாங் வீக் எண்டாக அமையும். இதனால் இப்போதே குஷியாகிவிட்டனர். அதேபோல மாதம் வாரியாக பார்க்கும் போது ஜனவரி மாதம் அதிகபட்சமாக 5 பொது விடுமுறை தினங்களும் ஏப்ரல் மற்றும் அக். மாதம் தலா 4 விடுமுறை நாட்களும் வருகின்றன. அதேநேரம் நவ. மாதம் எந்தவொரு பொது விடுமுறை நாட்களும் இல்லை.
கிழமை வாரியாக: கிழமை வாரியாக பார்த்தால் ஞாயிற்றுக்கிழமை 3 பொது விடுமுறை நாட்கள் வருகிறது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையும் 3 பொது விடுமுறை நாட்கள் வருகிறது. புதன்கிழமை 4 பொது விடுமுறை நாட்கள் வரும் நிலையில், வியாழக்கிழமை 6 விடுமுறை நாட்களும், வெள்ளிக்கிழமை 3 விடுமுறை நாட்கள் வருகின்றன. சனிக்கிழமை இரு விடுமுறை நாட்கள் மட்டுமே வருகிறது.
எந்த மாதம் அதிகம்: மேலும், மாதம் வாரியாக பார்க்கும் போது ஜனவரி மாதம் 5 விடுமுறை நாட்கள் வருகிறது. பிப். மாதம் ஒரு விடுமுறையும், மார்ச் மாதம் இரண்டு விடுமுறை நாட்களும் வருகிறது. ஏப்ரல் மாதம் 4 நாட்கள் விடுமுறை வரும் நிலையில், மே மற்றும் ஜூன், ஜூலை மாதங்கள் தலா ஒரு விடுமுறை நாள் வருகிறது.
ஆகஸ்ட் மாதம் 3 விடுமுறை நாட்கள் வரும் நிலையில், செப். மாதம் ஒரு நாள் விடுமுறை வருகிறது. அக். மாதம் நான்கு நாட்கள் விடுமுறை வரும் நிலையில், நவ. மாதம் விடுமுறை இல்லை. டிசம்பர் மாதம் ஒரு நாள் விடுமுறை வருகிறது.
முக்கிய விடுமுறை நாட்கள்: ஜனவரி 1- ஆங்கில புத்தாண்டு, ஜனவரி 14- பொங்கல், ஜனவரி 15- திருவள்ளுவர் தினம், ஜனவரி 16- உழவர் திருநாள், ஜனவரி 26- குடியரசு தினம், பிப்ரவரி 11- தைப்பூசம், மார்ச் 31- ரம்ஜான் பண்டிகை, ஏப்ரல் 14- தமிழ் புத்தாண்டு/ அம்பேத்கர் பிறந்த நாள், ஏப்ரல்- 18 புனித வெள்ளி, மே 1- உழைப்பாளர் தினம், ஜூன் 7- பக்ரீத் பண்டிகை, ஜூலை 6- மொகரம், ஆகஸ்ட் 15- சுதந்திர தினம், ஆகஸ்ட் 27- விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 2- காந்தி ஜெயந்தி, அக்டோபர் 2- தீபாவளி, டிசம்பர் 25- கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications