கவுரவ விரிவுரையாளர்களின்.. நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிய விஜய்! குழந்தைகள் தினத்தில் குட் நியூஸ்!
சென்னை: குழந்தைகள் தினத்தை ஒட்டி, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் அரசு கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.5000 உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பெரும்பாலும் கவுரவ விரிவுரையாளர்களால் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இப்படி இருக்கையில், இவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும்.

பல்கலைக்கழக மானிய குழு வழிகாட்டியதன் அடிப்படையிலும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலும் இவர்களுக்கு.. ஊதியமாக ரூ.50,000 வழங்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக நீடித்து வருகிறது.
கடந்த திமுக ஆட்சியில் இதற்காக இவர்கள் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும், மொத்தம் 164 அரசு கலை கல்லூரிகளில் 7000க்கும் அதிகமான கௌரவ விரிவுரையாளர்கள் ரூ.25,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்திருந்தனர். இந்த ஊதியமாவது பரவாயில்லை! இதற்கு முன்னர் இவர்களின் ஊதியம் வெறும் ரூ.15,000 மட்டுமே. 15 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருந்தாலும் கூட.. ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில், வெறும் ரூ.15,000 மட்டுமே வழங்கப்பட்டு வந்திருந்தது.
ஆனால், தொடர் போராட்டங்களுக்குப் பிறகு தற்போது இவர்களின் ஊதியம் அதிகரித்து இருக்கிறது. தற்போது அரசு கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.30,000 மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.25,000 தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் இவர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பு, கவுர விரிவுரையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதன் மூலம், அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் கவுர விரிவுரையாளர்கள் 8,721 பேர் பயனடைவார்கள் என்றும், அரசு பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் 319 கவுர விரிவுரையாளர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஊதிய ஒரு உயர்வு நவம்பர் 1ஆம் தேதி முதல் வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
