அதிகரிக்கும் கொரோனா.. கல்லூரி ஆசிரியர்களுக்கு ..ஸ்வீட் நியூஸ் கொடுத்த தமிழக அரசு.. என்ன தெரியுமா?
சென்னை: கல்லூரிக்கு வந்து ஆன்லைன் பாடங்களை நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு எந்த ஒரு கல்லூரி நிர்வாகமும் நிர்ப்பந்தம் செய்யக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 15,000-ஐ கடந்து விட்டது. உயிரிழப்பும் அச்சுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் ஊரடங்கு
இதனால் தமிழகத்தில் தினமும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாள் ஊரடங்கும் போடப்பட்டுள்ளது. மேலும் தியேட்டர்கள், மால்கள் திறக்க அனுமதியில்லை. கோவில்களில் மக்கள் அனுமதி இல்லை. உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதியில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் போடப்பட்டுள்ளன.

அழுத்தம் கொடுக்கும் நிர்வாகம்
இது தவிர பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்பை கல்லூரிகளுக்கு வந்து நடத்த வேண்டும் என்றும் இதர பணிகளுக்காக கல்லூரிக்கு வர வேண்டும் என்று ஒரு சில கல்லூரிகள் நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

தொடர் புகார்கள்
இது தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குனரகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- கொரோனா காலத்தில் கல்லூரி வகுப்புகளை இணைய வழியாக மட்டுமே நடத்த வேண்டும் என்று கூறியுள்ள நிலையில் ஒரு சில கல்லூரிகள் ஆசிரியர்களை கல்லூரிக்கு வந்து ஆன்லைன் பாடங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளது.

நடவடிக்கை எடுக்கப்படும்
ஆசிரியர்களை கல்லூரிக்கு வந்து ஆன்லைன் பாடங்களை நடத்த வேண்டும் என கல்லூரி நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்யக்கூடாது. வீட்டிலிருந்தே கூட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம். கல்லூரிக்கு வர ஆசிரியர்களை நிர்பந்தம் செய்தால் கல்லூரி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications