விஜய் என்னங்க இப்படி செய்கிறார்? அப்செட்டான டாப் அதிகாரிகள்! காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு சார்பில் சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்திகள் மற்றும் தவறானத் தகவல்களைக் கண்டறிவதற்காக கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 'உண்மைச் சரிபார்ப்பு மையம்' தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி இந்தத் துறை 'தகவல் உண்மைத்தன்மை சரிபார்ப்பு பிரிவு' என்று அழைக்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பெயர் மாற்றத்தைக் காட்டிலும் இந்தப் பிரிவின் தலைமைப் பொறுப்பிற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய நியமனமே தற்போது தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

tvk vijay

சமூக ஊடக அமைப்பாளர் குருவுக்கு முக்கிய பொறுப்பு

முதல்வர் விஜய்யின் தீவிர ஆதரவாளராகவும், சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்களையும் ஆதரவாளர்களையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்டு வந்த 'குரு' என்பவர், இந்தத் தகவல் உண்மைத்தன்மை சரிபார்ப்பு பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் சமூக ஊடகங்களில் விஜய்யின் திட்டங்கள், பிரச்சாரங்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரமாக முடுக்கிவிட்டதில் குரு முக்கியப் பங்காற்றியதாகக் கூறப்படுகிறது. விஜய்க்கு மிகவும் நெருக்கமான ஒரு உயர் மட்டப் புள்ளியின் பரிந்துரையின் பேரில் தான் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசு அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியும் கொந்தளிப்பும்

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான ஒரு முக்கியப் பிரிவுக்கு, தகுதியும் அனுபவமும் கொண்ட அரசுத்துறை அதிகாரிகளையோ அல்லது நடுநிலையான ஊடகவியல் நிபுணர்களையோ நியமிக்காமல், அரசியல் மற்றும் திரைப்படத் துறை சார்ந்த பின்னணி கொண்ட நபர்களை நியமிப்பது குறித்துப் பல மூத்த அரசு அதிகாரிகள் கடும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர்.

பெயர் வெளியிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் இது குறித்துப் பேசுகையில், "அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்த தவறானத் தகவல்களைச் சரிபார்க்கும் ஒரு பிரிவு, நடுநிலையோடும் தொழில்முறையோடும் செயல்பட வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அல்லது துறை சார்ந்த நிபுணர்களைத் தவிர்த்துவிட்டு, விஜய்யின் உள்வட்டாரத்திற்கு நெருக்கமானவர்களையும், சினிமா மற்றும் சமூக ஊடகத் துறையினரையும் இது போன்ற பொறுப்புகளில் அமர்த்துவது நிர்வாகச் சீர்கேட்டிற்கே வழிவகுக்கும்" என்று தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

கேள்விக்குறியாகும் நடுநிலைமை?

போலிச் செய்திகளை அடையாளம் காணும் இந்தப் பிரிவு, அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் விமர்சனங்களையும் 'போலிச் செய்தி' என முத்திரையிட்டு முடக்கிவிடும் அபாயம் இருப்பதாக ஏற்கனவே எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வந்தனர்.

தற்போது விஜய்யின் நேரடிச் சமூக ஊடக ஆதரவாளர் ஒருவரே இந்தப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், இந்தப் பிரிவின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு நடுநிலையோடு இருக்கும் என்ற கேள்வி மீண்டும் வலுப்பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வ அரசுப் பதவிகள் அரசியல் மற்றும் தனிநபர் ஆதரவாளர்களுக்குப் கிப்ட் தரக்கூடிய இடமாக மாறுவது அரசு நிர்வாகத்தின் நம்பகத்தன்மையைக் குறைக்கும் என சமூக வலைதளங்களிலும் விவாதங்கள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+