இளையராஜாவுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா.. சட்டசபையிலேயே அறிவித்த ஸ்டாலின். தேதி தான் ஹைலைட்டே!
சென்னை: இசைஞானி இளையராஜா தனது பிறந்தநாளை கொண்டாடும் ஜூன் 2ஆம் தேதி அவருக்கு தமிழ்நாடு அரசால் பாராட்டு விழா நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா அண்மையில் லண்டனில் தனது முதல் சிம்பொனியான 'Valiant'-ஐ அரங்கேற்றினார். முழுமையான சிம்பொனியை அரங்கேற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற இளையராஜாவுக்கு ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

லண்டன் செல்வதற்கு முன்னர் இளையராஜாவை அவரது ஸ்டூடியோவுக்கு சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். லண்டன் சென்றுவிட்டு இளையராஜா திரும்பிய போது தமிழக அரசு சார்பில் அவரை விமான நிலையம் சென்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார்.
பின்னர் சிம்பொனி அரங்கேற்றம் முடிந்து திரும்பிய பிறகு முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்திற்கு சென்று இளையராஜா சந்தித்து நன்றி தெரிவித்தார். அன்றைய தினமே முதல்வர் ஸ்டாலின் இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில், இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் தேதியை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இளையராஜா தனது பிறந்தநாளை கொண்டாடும் ஜூன் 2ஆம் தேதி பாராட்டு விழா தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்று தமிழக சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இளையராஜாவின் திரையிசைப் பயணத்தின் 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் ஜூன் 2 ஆம் தேதி இளையராஜாவுக்குப் பாராட்டு விழா நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இளையராஜா ஜூன் 3 ஆம் தேதி பிறந்தவர். தனது பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி பிறந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்காக ஜூன் 2 ஆம் தேதியை தனது பிறந்தநாளாக இளையராஜா கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. மறைந்த கருணாநிதி தான் இளையராஜாவுக்கு இசைஞானி என்ற பட்டத்தைச் சூட்டியவர்.
1976 ஆம் ஆண்டு 'அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமாவுக்கு அறிமுகமான இளையராஜா, இசைத்துறையில் செய்தவை எல்லாம் அசாத்திய சாதனைகள். இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 10,000-க்கு அதிகமான பாடல்களை உருவாக்கி உள்ளார்.
50 ஆண்டு காலமாக திரையிசையில் கோலோச்சி வரும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
-
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications