விஜய்யின் நிர்வாக தோல்வி? ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில்.. இப்படி ஒரு திடீர் முடிவு எடுத்த தவெக அரசு!
சென்னை: பங்குகள் வடிவிலான கடன் பத்திரங்கள் மூலம் ரூ.9,000 கோடியை திரட்ட தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. இதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது.
இப்படி நிதி திரட்டுவது சட்டப்பூர்வமானதுதான் என்றாலும் கூட.. அன்றாட செலவுகளுக்கே நிதி பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு நிர்வாகம் தோல்வியடைந்திருப்பதால்தான், தவெக அரசு இப்படியான நிலைப்பாட்டிற்க்கு சென்றிருக்கிறது என நிதி ஆலோசகர்கள் விமர்சித்திருக்கின்றனர்.

தமிழக அரசின் கடன் சுமை
வங்கிகளில் நாம் கடன் வாங்குவதை போல.. அரசும் தன்னுடைய தேவைகளுக்கு கடன் வாங்கும். கடனுக்காக பத்திரங்களை வெளியிடும். அதைத்தான் தற்போது அரசு செய்ய முன் வந்திருக்கிறது.
தவெக அரசு மட்டும்தான் இப்படி செய்கிறாதா? என்று கேட்டால் இல்லை. இதற்கு முன்பு இருந்த திமுக, அதிமுக அரசுகளும் கடன் வாங்கியிருக்கின்றன. குறிப்பாக கடந்த 2021-2022 மற்றும் 2022-2023ம் ஆண்டுகளில் திமுக தலைமையிலான தமிழக அரசு சராசரியாக ஆண்டுக்கு ரூ.87,000 கோடி வரை கடன் வாங்கியிருந்தது. இப்படி கடன் வாங்கியதன் மூலம் தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்திருந்தது.
மொத்த கடன் எவ்வளவு?
2006ம் ஆண்டில் திமுக ஆட்சியின் இறுதியில் மாநிலத்தின் மொத்த கடன் தோராயமாக ரூ.56,000 கோடியாகும். 2011ல் இது ரூ.1 லட்சம் கோடியாக உயர்ந்தது. அதன்பின்னர் வந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இறுதியில் கடன் ரூ.5.78 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த திமுக ஆட்சியின் இறுதி நிதியாண்டான 2025-2026 இடைக்கால பட்ஜெட் அறிவிப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த கடன் மதிப்பு ரூ.10.14 லட்சம் கோடியை தொடும் என மதிப்படப்பட்டிருந்தது.
விஜய்க்கு இதெல்லாம் தெரியாதா?
இதெல்லாம் முதலமைச்சர் விஜய்க்கு தெரியும். சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, இந்த பாயிண்ட்டை திமுகவுக்கு எதிராக முன்வைத்து பேசியிருந்தார். அதாவது, திமுக தமிழ்நாட்டின் மொத்த கடனை அதிகரித்துவிட்டது என்று குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அவர் முதலமைச்சராக தேர்வான பின்னர்.. தற்போது பத்திரங்கள் மூலம் கடன் வாங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருக்கிறதே.. இது மாநிலத்தின் மொத்த கடன் சுமையை உயர்த்தாதா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
அன்றாட செலவுகளுக்கே பணம் இல்லாமல் அரசு தவிக்கிறது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கும், தேர்தல் நோக்கத்திற்காக திட்டங்களை செயல்படுத்துவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
அரசு எதுக்காக கடன் வாங்க வேண்டும்?
உதாரணத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மகளிர் அனைவருக்கும் இலவச பேருந்து பயணத்தை விஜய் அறிவித்திருக்கிறார். இது வரவேற்க வேண்டிய விஷயம்தான். ஆனால், இதை இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால்.. லாபத்தில் இயங்கி வரும் போக்குவரத்து கழகத்திற்கு வரும் வருமானத்தையும் காப்பாற்றியிருக்கலாம்.. அதேபோல மக்களும் பயன் பெற்றிருப்பார்கள். இது நடக்க வேண்டும் எனில், மக்களின் அன்றாட வருவாயை உயர்த்த வேண்டும்.
விஜய் இதில் கவனம் செலுத்துவாரா?
படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை வேண்டும். சும்மா ஊபர், ரேபிடோ, ஓடா, ஸ்விக்கி போன்று இல்லாமல்.. சமூக பாதுகாப்பான வேலை வேண்டும். ஒரு நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது எனில், அந்த வேலையில் பாதுகாப்பு இருக்க வேண்டும். சென்னையை மட்டும் குறிவைத்து வளர்ச்சியை கொண்டுவராமல்.. உள் மாவட்டங்களிலும் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் தஞ்சாவூர் போன்ற இரண்டாம் மற்றும் 3ம் கட்ட நகரங்களுக்கு மினி டைடல் பார்க் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மாநிலத்தின் வருவாய்
ஒரு டைடல் பார்க் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துகிறது எனில்.. அதை சுற்றி ஓட்டல், தங்குமிடம், காபிஷாப் என 3,000 பேருக்கு மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைக்கும். இதுதான் உண்மையான மாற்றம். மக்கள் கையில் இப்படித்தான் பணம் புழங்கும். தவெக அரசு இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என பலரும் கூறுகின்றனர். இப்படி செய்தால் மாநிலத்தின் வருவாய் அதிகரிக்கும்.. அதே நேரம் பத்திரங்களை விற்று கடன் வாங்கும் நடைமுறையும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு பெற உள்ள கடன் விவரம்
7.80% தமிழ்நாடு அரசு பிணைய பத்திரங்கள்-2041 மூலம் ரூ.2,500 கோடி மறுவெளியீடு
8.14% தமிழ்நாடு அரசு பிணைய பத்திரங்கள்-2046 மூலம் ரூ.2,500 கோடி மறுவெளியீடு
8.21% தமிழ்நாடு அரசு பிணைய பத்திரங்கள்-2051 மூலம் ரூ.2,000 கோடி மறுவெளியீடு
8.18% தமிழ்நாடு அரசு பிணைய பத்திரங்கள்-2056 மூலம் ரூ.2,000 கோடி மறுவெளியீடு ஆகியவை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த ஏலம், RBI-ஆல் அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் அக்.27 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் காலை 10.30-11.30 மணியளவிலும், போட்டியற்ற ஏல கேட்புகள் 10.30-11 நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
