தமிழக அரசின் தேவையில்லாத வாதத்தால்.. திருப்பரங்குன்றம் தீபத்தூண் விஷயத்தில் வெடிக்கப்போகும் புதிய பிரச்சனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ.24ம் தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முன்வைத்திருக்கும் வாதங்கள் புதிய பிரச்சனைக்கு அடித்தளம் போட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

கடந்த ஆண்டு கார்த்திகை தீப நாளில், மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் இருக்கும் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் வலியுறுத்தியிருந்தன.

Tamil Nadu Govt

இதற்கு அப்போதைய திமுக அரசு ஒப்புக்கொள்ளவில்லை. அதெல்லாம் முடியவே முடியாது என்ற கறாராக நின்றது. இதையடுத்து இந்து அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ராம ரவிக்குமார் கோரும் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட.. பெரிய பிரச்சனை கிளம்பியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய.. உயர்நீதிமன்றம், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கொடுத்த உத்தரவை உறுதி செய்தது. ஆனாலும், தமிழக அரசு விட்டுக்கொடுக்கவில்லை.

இப்படியாக இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது. நேற்று இந்த வழக்கு, நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு வைத்த வாதங்கள் புதிய பிரச்சனையை கிளப்பும் வகையில் அமைந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதாவது, கடந்த 1923ம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பின்படி, கோயில் மற்றும் மசூதியின் எல்லைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி தீபம் ஏற்ற உரிமைக்கோரப்படும் கல் தூண் கோயிலுக்கு சொந்தமானது என தமிழக அரசு கூறியிருக்கிறது. ஆனால், சிக்கந்தர் தர்கா தரப்பு.. கல்தூணை தர்காவுக்கு சொந்தமானது என்று கோரியிருக்கிறது.

தமிழக அரசுக்கும், தர்கா தரப்புக்கும் நோக்கம்.. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்பதுதான். ஆனால், அந்த தூண் யாருக்கு சொந்தம் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்கின்றன. இந்த வழக்கு 'தீபம் ஏற்றும் வழக்கம்' மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்புடையது. இதுபற்றிதான் வாதங்கள் வைக்கப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு தற்போது தூண் யாருக்கு சொந்தம் என்கிற ரீதியில் வாதங்கள் வைத்திருப்பதால், இந்த வழக்கு நில உரிமை பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. 100 ஆண்டுகளுக்கு பிறகு தூணின் உரிமை குறித்து பேசுவது வழக்கில் புதிய விவாதங்களை கிளப்பும் என பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.

தமிழக அரசு தீபம் ஏற்றுவது குறித்து பேசாமல், நில உரிமை பிரச்சனையை கிளப்பியிருப்பதால், உச்சநீதிமன்றம் கல்தூண் யாருடையது என்று விசாரித்து.. அது கோயிலுக்கு சொந்தமானது என்கிற வாதத்தை ஏற்று.. தீபம் ஏற்ற உத்தரவிட்டால் தமிழக அரசுக்கும், தர்கா தரப்புக்கும் பெரும் பின்னடைவாக அமையும்.

இதுபோன்ற சென்சிடிவான விஷயங்களில் தமிழக அரசு அசால்ட்டாக வாதங்களை வைத்திருக்கிறது. இதனால் இந்த வழக்கின் போக்கே மாறப்போகிறது என்றும் எச்சரிக்கைகள் எழுந்திருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+