மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவைவிட தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு.. வெள்ளை அறிக்கை
சென்னை: மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவைவிட தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவாக உள்ளதாக வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாநில மொத்த உற்பத்தியில் 28.3 சதவீதம் கடன் என இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிக அதிகமாக உள்ளது. குஜராத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் 17.6 சதவீதமாகவும், மகாராஷ்டிராவில் 19.7 சதவீதமாகவும், கர்நாடகாவில் 23.4 சதவீதமாகவும், தமிழ்நாட்டில் 28.3 சதவீதமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வராக விஜய் பதவியேற்ற உடனேயே, தமிழ்நாட்டின் நிதி நிலை சார்ந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவித்தார். அதன்படி இன்று தமிழ்நாட்டி நிதி நிலை சார்ந்த வெள்ளை அறிக்கையினை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அப்போது அவர் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவைவிட தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு என்று கூறினார். மரிய வில்சன் கூறியதாவது:-

வெள்ளை அறிக்கை வெளியீடு
அண்டை மாநிலங்களை விட தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி குறைவாக உள்ளது. மத்திய அரசிடம் இருந்து நிதி பகிர்வு சரியாக கிடைக்கவில்லை. மாநில GDPயில் மொத்த வருவாய் அளவு 10%ல் இருந்து 8.32% ஆக சரிந்துள்ளது. கடந்த ஆட்சியில் தனிநபர் கடன் 92% உயர்ந்துள்ளது. ஒவ்வொரு தனி மனிதர் மீதும் ரூ.1.28 லட்சம் கடன்.
முந்தைய அரசு முதலீட்டுக்கு அல்லாமல் அன்றாட செலவுக்கு கடன் வாங்கியுள்ளது. அரசு, வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ.67,000 கோடி செலுத்துகிறது. கனிம வளத்துறையில் நடந்த ஊழல், வருவாய் இழப்புக்கு முக்கிய காரணம். மாநிலத்தின் சொந்த வரி வருவாய், வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடன் 5 லட்சம் கோடியில் இருந்து 10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு தற்போது சராசரிக்கும் கீழே சரிந்துள்ளது..
தமிழ்நாட்டில் தான் மிக அதிகம்
2021-26 ல் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. மாநில மொத்த உற்பத்தியில் 28.3 சதவீதம் கடன்; இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிக அதிகமாக உள்ளது. குஜராத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் 17.6 சதவீதமாக உள்ளது. மகாராஷ்டிராவில் 19.7 சதவீதமாக உள்ளது.
கர்நாடகாவில் 23.4 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டில் 28.3 சதவீதமாக உள்ளது. குஜராத்தில் கடன் போக்கு சீரானதாகவும், மகாராஷ்டிராவில் நிலைத்துள்ளதாகவும், கர்நாடகாவில் குறைந்து வருவதாகவும் வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக அளவு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
முறையற்ற நிதி நிர்வாகத்தால்
முந்தைய ஆட்சியாளர்களின் முறையற்ற நிதி நிர்வாகத்தால் மாநிலத்தின் சொந்த வருவாய் ஆதாரங்கள் சுருங்கி, ஒட்டுமொத்த நிதி நிலைமையும் கடுமையான பாதாளத்திற்குச் தள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த நிலுவைக் கடன் சுமார் ரூ.5 லட்சம் கோடியில் இருந்து ஏறத்தாழ ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடியாக உள்ளதாகவும் கூறினார்.
மேலும், 2021-22ஆம் ஆண்டில் ரூ.46,528 கோடியாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறை, 2025-26ஆம் ஆண்டில் ரூ.78,324 கோடியாக அதிகரித்துள்ளது என்றும், இது மாநில வரலாற்றிலேயே இல்லாத அளவிலான உச்ச நிலை என கூறினார்.












Click it and Unblock the Notifications