தமிழ்நாட்டில் வெயில் வெளுத்து கட்டுமாம்.. மொத்தம் 14 இடங்களில் "சதம்".. பறந்து வந்த முக்கிய வார்னிங்
சென்னை: தமிழ்நாடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் தினந்தோறும் வெயில் சதமடித்தபடியே உள்ளது.. அந்த வகையில் நேற்று முன்தினத்தைவிட, நேற்றைய தினம் கூடுதல் வெயில் வாட்டி வதைத்துள்ளது.. இன்றும் வெயில் அதிகரித்தே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
அக்னி நட்சத்திரம் சமீபத்தில் முடிந்துவிட்டது என்றாலும், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் இன்னமும் அதிகரித்து கொண்டேயிருக்கிறது.. எனினும் பெரும்பாலான மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பொழிய துவங்கிவிட்டது.
வானிலை: இதனிடையே நேற்றுமுன்தினம் வானிலை மையம் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. அதன்படி, மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஜூன் 14 முதல் 16 வரையிலான நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்றும் அறிவித்திருந்தது.

அதேபோல மாநிலத்தில் பல இடங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், குறிப்பாக, 2 நாட்களுக்கு கடுமையான வெயில் சுட்டெரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.. இதையேதான் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் பலமுறை ட்வீட் போட்டு தெரிவித்து கொண்டேயிருந்தார்.. அந்தவகையில், நேற்று முன்தினம், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட 17 இடங்களில் வெயில் சதம் அடித்திருந்தது..
வானிலை மையம்: குறிப்பாக, சென்னை நுங்கம்பாக்கம் 105 டிகிரி பாரன்ஹீட், மீனம்பாக்கம், தூத்துக்குடி 104, மதுரை விமான நிலையம், மதுரை நகரம் , நாகப்பட்டினம் கடலூரில் 103 டிகிரி, பரங்கிபேட்டை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர் , திருப்பத்தூரில் 102 டிகிரி, வேலூர், திருத்தணி, கரூர் பரமத்தி, ஈரோடு, காரைக்காலில் 101 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் கொளுத்தியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
நேற்றைய தினம்கூட அளவுக்கு அதிகமான வெயில் தமிழகத்தின் மாவட்டங்களில் பதிவாகி உள்ளது. . நேற்று மட்டும் தமிழ்நாட்டின் மொத்தம் 14 இடங்களில் வெயில் சதம் அடித்து இருந்தது.. இதில் அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 105 டிகிரி பதிவாகியிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனம்பாக்கம்: 100 டிகிரிக்கு மேல் பதிவான இடங்கள் என்னென்ன தெரியுமா? சென்னை நுங்கம்பாக்கம் - 105.26 டிகிரி (40.7 செல்சியஸ்) சென்னை மீனம்பாக்கம் - 104 டிகிரி (40 செல்சியஸ்) கடலூர் - 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்) ஈரோடு - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்) கரூர் - 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்) மதுரை விமானநிலையம் - 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்) நாகப்பட்டினம் - 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகி உள்ளது.
அதேபோல, பரங்கிப்பேட்டை - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்) தஞ்சாவூர் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்) திருப்பத்தூர் - 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்) திருச்சி - 102.02 டிகிரி (38.9 செல்சியஸ்) திருத்தணி - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்) தூத்துக்குடி - 104 டிகிரி (40 செல்சியஸ்) வேலூர் - 101.66 டிகிரி (38.7 செல்சியஸ்) இதுதவிர, புதுச்சேரியில் 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்), காரைக்கால் 100.94 டிகிரி (38.3 செல்சியஸ்) பதிவாகியிருக்கிறது.
வெயில் தொடரும்: இதனிடையே, சென்னையில் இன்றும் வெயில் அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.. சென்னையின் 40டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்த போவதாகவும், இனி இது தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications