ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்..மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் நியமனம்
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பதவியேற்ற உடன் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாட்டின் 49வது தலைமை செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். சிவ்தாஸ் மீனா நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்தார். அவர் தலைமைச்செயலாளராக பதவியேற்ற பிறகு அவரது பதவிக்கு கார்த்திக்கேயன் ஐஏஎஸ் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளராக கார்த்திகேயன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக மங்கத்ராம் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலையில் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை மேலாண் இயக்குநராக விஷு மகாஜனும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிறபடுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீத்தா ஹரீஷ் தக்கரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்ய தனி அதிகாரியாக சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக ஏ.அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், சென்னை மாநகராட்சி (வருவாய்-நிதி) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அர்ச்சனா பட்நாயக், மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு! -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
காடுவெட்டி குரு மகள் பேச்சை பார்த்தீங்களா? அன்புமணிக்கு டபுள் டென்ஷன்.. வன்னியர் ஓட்டு யாருக்கு லாபம் -
நிலம் வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஹென்றி சொன்ன இந்த மேஜர் விஷயத்தை பாருங்க.. அப்புறம் முடிவெடுங்க -
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
எடப்பாடி பெயரை கூட.. மோடி சொல்லாதது இதற்குத்தானா? பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ ஸ்கெட்ச்.. போச்சு -
தூண்டில் போடும் டெல்லி! தன் பாட்டுக்கு விஜய்.. இப்ப தான் ஆட்டம் ஆரம்பம்.. 2026-ன் கிங் மேக்கர் யார்? -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன












Click it and Unblock the Notifications