2 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் பிரகாஷ் மாற்றம்!
சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகள் இரண்டு பேரை தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் பிரகாஷ் ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் ஆணையராக மலர்விழி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சாய்குமார் பிறப்பித்துள்ளார்.

தவெக அரசு ஆட்சியமைத்த பின் தமிழகத்தில் பல்வேறு முக்கிய துறைகளிலும் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், 2 துறைகளின் முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர்.
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் பிரகாஷ், தமிழக ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை செயலர் ஆக மாற்றப்பட்டு உள்ளார்.
தமிழக ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை செயலர் மலர்விழி ஐஏஎஸ், வருவாய் நிர்வாகம், மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


Click it and Unblock the Notifications
