Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினின் கனவு.. போலீஸ் கைகளில் டிரோன்.. அமெரிக்காவின் அஸ்திரத்தை கையிலெடுத்த அரசு! தப்பவே முடியாது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு போலீசில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ள டிரோன் பிரிவை பதவியில் இருந்து ஓய்வு பெறும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று தொடங்கி வைத்தார்.

அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் பல தங்களின் எல்லையோர பாதுகாப்பிற்கும், உள்நாட்டு பாதுகாப்பிற்கும் டிரோன்களை பயன்படுத்தி வருகிறது. தீவிரவாத பகுதிகளில் தாக்குதல் நடத்த ராணுவ டிரோன்களை பயன்படுத்துவது மட்டுமின்றி, உள்நாட்டு அளவில் பாதுகாப்பு பணிகள், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் சிறிய அளவில் குவாட்காப்டர் வகை டிரோன்களை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. சீனா உள்ளிட்ட நாடுகளிலும் கூட இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அதே நடவடிக்கைதான் தற்போது தமிழ்நாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Tamil Nadu Introduces Drone Police in its Fleet: CM Stalins dream plan comes true

தமிழ்நாடு - சட்டசபை: தமிழ்நாட்டில் ட்ரோன் போலீஸ் படை பிரிவை அறிமுகப்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். 3.80 கோடி மதிப்பில் இந்த போலீஸ் படை பிரிவு உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படியே இந்த படை தற்போது உருவாக்கப்பட்டு உள்ளது. சென்னை அடையாறில் சிக்னல் அருகே இந்த படை பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்காக தலைமை காவல் நிலையம் அங்கு கட்டுப்பட்டு உள்ளது. தற்போது அந்த காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

கண்காணிக்க முடியும்: இவர்கள் முதல் கட்டமாக 9 ட்ரோன்களையும் அதன்பின் நூற்றக்கணக்கான ட்ரோன்களையும் களமிறக்க உள்ளனர். சென்னையில் பறக்கவிட்டு மக்களை கண்காணிக்க உள்ளனர். சில ட்ரோன் இதில் 9 கிலோ மீட்டர் வரையிலும் சில அதைவிட அதிகம் தூரம் செல்ல கூடிய திறனும் கொண்டதாக இருக்கும். இந்த ட்ரோன் மூலம் குற்றச்செயல்களை தடுக்க முடியும். போலீசாருக்கு உதவியாக இருக்க முடியும். கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் எளிதாக துப்பு துலக்க முடியும்.

பைக்குகள் - இரவு நேரம்: உதாரணமாக இதில் இரவு நேரத்தில் பார்க்கும் இன்ப்ராரெட் கருவிகள், ஒரு அறைக்குள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் ஹீட் சோதனை கருவிகள் உள்ளன. ஒரு நபர் கொள்ளை, கொலை செய்துவிட்டு பைக்கில் வேகமாக செல்கிறார் அவரை போலீஸ் பின் தொடருகிறது என்றால், இந்த ட்ரோன் அந்த சமயங்களில் உதவியாக இருக்கும். அதோடு ஹீட் சென்சார் மூலம் அவர் எங்கே இருக்கிறார் என்பதையும் கண்டுபிடிக்க முடியும். இதில் facial recognition முறை உள்ளது. இதனால் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும் நபர்கள் ஏற்கனவே குற்ற செயல்களை செய்து இருந்தாலும் தெரிந்துவிடும்.

குற்றங்களை தடுக்க முடியும் - face recognition: ஓடி ஒளிந்து இருக்கும் குற்றவாளிகளை பிடிக்கவும் இது உதவியாக இருக்கும். அதோடு இதில் பேஷியல் லாக் உள்ளது. அதாவது பெரும் கூட்டத்தில் ஒரு குற்றவாளியை கண்டுபிடிக்கிறோம். ஆனால் அவர் கூட்டத்தில் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்றாலும், இந்த ட்ரோன் அவரின் முகத்தை லாக் செய்துவிடும். இதனால் அவர் மட்டும் எங்கே நகர்ந்தாலும் எளிதாக கண்டுபிடித்து விட முடியும். இதனால் பெரும் கூட்டங்களில் நடக்கும் குற்றச்செயல்களை எளிதாக தடுத்து நிறுத்திவிட முடியும்.

மக்கள் எண்ணிக்கையை கூட கணக்கிட முடியும்: இது போக கூட்டம் நிகழ்ச்சிகள், மெரினா போன்ற இடங்களில் மக்களை கண்காணிக்க முடியும். ஒரு இடத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றும் கணக்கிட முடியும். மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும். டிராபிக் பிரச்சனைகளையும் தீர்க்க முடியும். பைக் மூலம் நடக்கும் குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும். போலீஸாரின் வேலையை இந்த ட்ரோன் எளிமையாக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தான் தற்போது தமிழ்நாடு போலீஸ் படையில் ட்ரோன் போலீஸ் என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் களமறிக்கி உள்ளார்.

டீம் எப்படி?: இந்த புதிய படை பிரிவிற்கு இணை கமிஷனர் நரேந்திரன் நாயர் பொறுப்பேற்கிறார் . அவரின் மேற்பார்வையில் இந்த டீம் செயல்படும். மொத்தம் 8 பேர் கொண்ட போலீசார் குழு இதற்காக உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த 8 பேரும் பொறியியல் படித்த போலீஸ் அதிகாரிகள் ஆவர். இவர்களுக்கு கீழ் 20 டெக்னீஷன்கள் வேலை செய்ய உள்ளனர். இவர்கள் குவாட்காப்டர் வகை டிரோன்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் போன்ற விமானங்களை இயக்க உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+