"பிளான் 5 எக்ஸ்".. சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த குட் நியூஸ்.. இது லிஸ்டுலேயே இல்லையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பார்ட்னர் நாடாக வருவதற்கு சிங்கப்பூர் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் முதலீடுகளை அதிகரிக்கவும் சிங்கப்பூர் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வெளிநாடு பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டார்.

 Tamil Nadu investment: Singapore Govt has conveyed to it’s intention to become the first partner country TN Global Summit

ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க பயணம் மேற்கொண்டார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் கொண்டு வரவும் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் கொண்டு வரவும் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதற்கு அழைப்பு விடுப்பதற்காக அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் அவர் முக்கிய சந்திப்புகளை நடத்தினார். அங்கே அரசியல் தலைவர்கள், பல்வேறு நிறுவன சிஇஓக்கள், அங்கே வசிக்கும் தமிழர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைகளை மேற்கொண்டார்.

தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை 2021. தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை 2021. தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022, தமிழ்நாடு விண்வெளி & பாதுகாப்புத் தொழில் கொள்கை 2022. தமிழ்நாடு எத்தனால் கலவைக் கொள்கை 2023 மற்றும் தொழில் நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்புதிட்டம் போன்ற பல்வேறு துறை சார்ந்த கொள்கைகளை குறித்து இந்த பயணத்தின் போது முதல்வர் ஸ்டாலின் சர்வதேச நிறுவனங்களுடன் ஆலோசனை செய்தார்.

தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ள இந்த முதலீட்டாளர்கள் ,மாநாடு மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. 3 லட்சம் கோடிக்கு முதலீடுகளை கொண்டு வர தமிழ்நாடு அரசு ஆலோசனைகளை செய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பார்ட்னர் நாடாக வருவதற்கு சிங்கப்பூர் கோரிக்கை விடுத்துள்ளது.

முதல் நாடாக சிங்கப்பூர் தனது வருகையை உறுதி செய்ததுடன், இந்த மாநாட்டில் பார்ட்னர் நாடாக இருக்கவும் விரும்புவதாக தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் முதலீடுகளை அதிகரிக்கவும் சிங்கப்பூர் முடிவு செய்துள்ளது. இதற்காக பிளான் 5 எக்ஸ் என்பதை சிங்கப்பூர் களமிறக்க உள்ளது.. அதாவது சராசரியாக செய்யும் முதலீடுகளை விட 5 மடங்கு அதிகம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் அமைச்சர்கள் பலரை தமிழ்நாடு அமைச்சர்கள் சந்தித்த நிலையில்தான் இந்த நல்ல செய்தி வந்துள்ளது.

குவியும் முதலீடுகள்: தமிழ்நாடு 2 ஆண்டுகளில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது; உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும். கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர மின் வாகனங்களில் 46% வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை.

 Tamil Nadu investment: Singapore Govt has conveyed to it’s intention to become the first partner country TN Global Summit

கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன.

முக்கியமாக இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு சென்னை முழுக்க கார், பைக் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+