சென்னை செஸ் ஒலிம்பியாட்.. ஏற்பாடுல்லாம் மாஸ்.. தமிழ்நாடு அரசை புகழ்ந்த சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறுகிற நிலையில், அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளதாக தமிழக அரசுக்கு சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

Recommended Video

    Chess Olympiad ல் இந்தியா கண்டிப்பா ஜெயிக்கும் - Viswanathan Anand*Sports

    1927-ம் ஆண்டு முதன்முறையாக லண்டனில் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்தடுத்து ஒவ்வொரு நாடுகளில் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டின் தலநகரான சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது தமிழக மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

     சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி

    சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி

    இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் ரஷியா, சீனா உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளை தவிர மொத்தம்187 நாடுகளைச் சோந்த 2,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா். சென்னையில் போட்டி நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை தழிழக அரசு ஆரம்பத்தில் இருந்து தீவிரமாக மேற்கொண்டு வந்தது. குறிப்பாக சென்னை மெரினா உள்பட பல்வேறு இடங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரங்களை செய்யத்தொடங்கியது. மேலும் பல்வேறு இடங்களில் இதற்கான விழிப்புணர்வு நிகழ்சியினையும் செய்து வந்தது.

     நேப்பியர் பாலம்

    நேப்பியர் பாலம்

    குறிப்பாக முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்களில் விளம்பர பலைகைகள், என பல்வேறு இடங்கள் சதுரங்க அட்டையினை போல் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இதிலும் முக்கியமாக
    இந்நிலையில் இன்று விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ள ஆவின் பால் பாக்கெட்டுகளில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம் இடம்பெற்றுள்ளது. காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலமும் செஸ் கட்டங்களை போல வண்ணம் தீட்டப்பட்டிருந்து. தற்போது இந்த இடத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர். இந்த விளம்பரம் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றே சொல்லலாம்.

     ஆவின் பாக்கெட்டில் விளம்பரம்

    ஆவின் பாக்கெட்டில் விளம்பரம்

    அதேபோல ஆவின் பாக்கெட் பாலில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ்நாடு அரசின் இந்த விளம்பரத்தை பார்த்த, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், பிரபல செஸ் வீரருமான விஸ்வாநாதன் ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தன்னுடைய வீட்டுக்கு வழங்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டின் செஸ் விளம்பர புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.

     இதுவே சிறந்தது

    இதுவே சிறந்தது

    இதேபோல் ஸ்பெயின் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரான்சிஸ்கோ வலேஜோவும் தமிழக அரசின் சிறப்பான ஏற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் கூறுகையில், 'செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளது. இதுவரை பார்த்ததில் இதுவே சிறந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு அரங்காக தெரிகிறது. சென்னை வந்தடைந்ததும் புகாரளிக்கும் வகையில் ஏதாவது குறைபாடு இருக்குமா? என்று தேடினேன். ஆனால் இதுவரை எல்லா ஏற்பாடுகளும் முற்றிலும் ஆச்சரியமாக உள்ளது' என்று கூறியிருந்தார்.

     பாராட்டு

    பாராட்டு

    இவ்வாறாக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்த்து பலரும் திகைத்து வருகின்றனர். இவ்வாறாக பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்ற நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பும் தமிழக அரசு செஸ் ஒலிம்பியாட் தொடருக்காக செய்து வரும் பணிகளை பாரத்து பிரம்மித்துள்ளது. இது குறித்து இன்று சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரை பிரபலப்படுத்த சிறப்பான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவுக்கு செஸ் வீரர்களை வரவேற்கும் விதமாக இன்று நாட்டின் முன்னணி நாளிதழ்களில் முதல் பக்கம் விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழ்நாட்டில் இன்று வெளிவந்த நாளிதழ்களின் முதல் பக்க புகைப்படத்தையும் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
    முன்னதாக, செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கஉள்ளதையொட்டி இன்று காலை தமிழ்நாட்டில் வெளிவந்த தினசரி நாளிதழ்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடருக்கான விளம்பரம் முதல் பக்கத்தில் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+