நமோ செயலியில் தமிழகம் மூன்றாம் இடம்.. வானதி சீனிவாசனை வாழ்த்திய அண்ணாமலை
சென்னை: நமோ செயலியில் தமிழகத்தில், 5000 பயனாளிகளுக்கு மேல், புகைப்படங்களை பதிவேற்றம் செய்த பாஜக மகளிரணியினரைச் சந்தித்து வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொண்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக எம்.பி.க்களை ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள 'நமோ' என்ற செயலியை பயன்படுத்துகிறார். இந்த செயலி பிரதமரின் பெயரின் முதல் இரண்டு எழுத்துகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் எம்.பி.க்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பிரதமர் அனுப்பும் குறுஞ்செய்திகளையும், இமெயில்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "நாடு முழுவதும் மாநிலங்களிடையே, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு நலத்திட்டங்களின் பயனாளிகளைக் கண்டறிந்து, அவர்கள் புகைப்படங்களை நமோ செயலியில் பதிவேற்றம் செய்யும் நிகழ்வில், தமிழகம் இந்திய அளவில், மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில், 5000 பயனாளிகளுக்கு மேல், புகைப்படங்களை நமோ செயலியில் பதிவேற்றம் செய்த பாஜக மகளிரணியினரைச் சந்தித்து வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொண்டேன். தமிழக அளவில், ஐந்தாயிரம் பயனாளிகளுக்கு மேல் கண்டறிந்து, அவர்கள் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்த பாஜக சகோதர சகோதரிகள் 13 பேரில், 11 பேர், கோவை பெருங்கோட்ட மகளிரணியினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை இன்று சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.

இந்த நிகழ்வினை அகில இந்திய அளவில் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தி வரும் பாஜக மகளிரணி தேசியத் தலைவி திருமதி வானதி சீனிவாசன் அக்கா அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்திலிருந்து பெருவாரியான வெற்றியாளர்களைப் பெற்றுத்தந்த கோவை பெருங்கோட்டப் பொறுப்பாளர் முருகானந்தம் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?











Click it and Unblock the Notifications