தடுப்பூசி செலுத்த மக்கள் தயார்...தமிழகத்தில் கையிருப்பு இல்லையே - அமைச்சர் மா.சுப்ரமணியன்
தடுப்பூசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தமிழகத்தில் பற்றாக்குறை உள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழ்நாடே தயாராக உள்ளது, ஆனால் தடுப்பூசிதான் கையிருப்பில் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் 5 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதால் 45 இடங்களில் தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களுக்கான தடுப்பூசி முகாம் தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் தடுப்பூசி முகாமை தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார். தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாம் மூலம் சுமார் 20,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தலைமை நீதிபதி , தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிக்கு மாற்று ஏதுமில்லை என்று கூறினார்.

மா.சுப்ரமணியன்
இதனைத் தொடர்ந்து பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் போதுமான தடுப்பூசிகள் இல்லை என்பது வருத்தமானது என்றார். தடுப்பூசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை உள்ளதாக கூறினார்.

பற்றாக்குறை
நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் மலைப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்களும் தடுப்பூசி போட தயாராக உள்ள நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருவது வருத்தமளிக்கிறது என்றும் இன்றோடு கையிருப்பில் உள்ள தடுப்பூசி காலியாகி விடும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
Recommended Video

2 லட்சம் டோஸ்கள்
தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்திற்கு இதுவரை வந்த 1.44 கோடி தடுப்பூசி டோஸ்களில் 1.41 கோடி டோஸ்கள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது 2 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக கூறிய அவர் பிற்பகலுக்கு மேல் மேல் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

தடுப்பூசி முகாம் நிறுத்தம்
சென்னையில் 5 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருப்பதால் இன்று 45 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புற,ஆரம்ப சுகாதார நிலையங்களில் 19 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விரைந்து தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications