ரூ.1000+ரூ.750.. அள்ளித் தரும் தமிழக அரசு! 2 வருஷத்தில் உங்க வாழ்க்கையே மாறிடும்! முழு விபரம்!
சென்னை: ஐ.டி.ஐ-களுக்கான - 2026-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை ரூ. 750/- வழங்கப்படும் என்பதோடு, தமிழ்ப்புதல்வன், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000/- வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
2026-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ரோடு, குள்ளனம்பட்டியில் இயங்கிவரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு மாணவ மாணவிகள் (இருபாலரும்) www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும்முறை
www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் ஆகியவற்றில் Help Desk அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் 16 .05.2026.
*இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 03.06.2026.
மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படின். முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திண்டுக்கலில் நேரில் தொடர்பு கொண்டும் அல்லது தொலைபேசி இணைப்பு எண். 9894610168, 9499055762 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் சேர்க்கை குறித்த விபரம் அறிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பக்கட்டணம்
*விண்ணப்பக்கட்டண தொகையானரூ 50 /- விண்ணப்பதாரர் Debit Card/ Credit Card/ Net Banking /G.Payவாயிலாக செலுத்தலாம்.
கலந்தாய்வு
மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைபட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.
தொழிற்பிரிவுகள்:
| படிப்பு | ஆண்டுகள் | கல்வித் தகுதி |
| FITTER (பொருத்துநர்) | 2 ஆண்டுகள் | SSLC தேர்ச்சி |
| TURNER (கடைசலர்) | 2 ஆண்டுகள் | SSLC தேர்ச்சி |
| MACHINIST(இயந்திரவியல்) | 2 ஆண்டுகள் | SSLC தேர்ச்சி |
| M.M.V (கம்மியர் மோட்டார் வண்டி) | 2 ஆண்டுகள் | SSLC தேர்ச்சி |
| ELECTRICIAN (மின்சாரபணியாளர்) | 2 ஆண்டுகள் | SSLC தேர்ச்சி |
| WIREMAN (கம்பியாள்) | 2 ஆண்டுகள் | 8ம் வகுப்பு தேர்ச்சி |
| SPIN.TECH (ஸ்பின்னிங் டெக்னீசியன்) | 2 ஆண்டுகள் | SSLC தேர்ச்சி |
| RACT (குளிர்பதனம் மற்றும் தட்பவெட்ப நிலை கட்டுப்படுத்தும் பிரிவு தொழில்நுட்பவியலாளர்) | 2 ஆண்டுகள் | SSLC தேர்ச்சி |
| WELDER (பற்றவைப்பவர்) | 1 ஆண்டுகள் | 8ம் வகுப்பு தேர்ச்சி |
| MECH.DIESEL (கம்மியர் டீசல்) | 1 ஆண்டுகள் | SSLC தேர்ச்சி |
| L.G.M(தோல்பொருள் உற்பத்தியாளர்) | 1 ஆண்டுகள் | 8ம் வகுப்பு தேர்ச்சி |
| M.F.W (காலணி உற்பத்தியாளர்) | 1 ஆண்டுகள் | 8ம் வகுப்பு தேர்ச்சி |
| Advance CNC Machining Technician | 2 ஆண்டுகள் | SSLC தேர்ச்சி |
| Industrial Robotics & Digital Manufacturing Technician | 1 ஆண்டுகள் | SSLC தேர்ச்சி |
| Basic Designer and Virtual Verifier (Mechanical) | 2 ஆண்டுகள் | SSLC தேர்ச்சி |
| Manufacturing Process Control & Automation | 1 ஆண்டுகள் | SSLC தேர்ச்சி |
சிறப்பம்சங்கள்:
• மாதந்தோறும் உதவித்தொகை ரூ. 750/- வழங்கப்படும்.
• தமிழ்ப்புதல்வன், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000/-
• பயிற்சியில் சேர ஆண்கள் 14 முதல் 40 வயது வரை, மகளிருக்கு உச்சகட்ட வயது வரம்பு இல்லை
• விலையில்லா பாடபுத்தகம், சீருடை, மிதிவண்டி, வரைபடக்கருவிகள் மற்றும் காலணிகள்
• இலவசபேருந்துபயணஅட்டை
• மத்தியஅரசின் NCVT சான்றிதழ்
• கட்டணமில்லா உணவுடன் கூடிய தங்கும் விடுதி வசதி.
• காப்புத் தொகைரூ 100 பயிற்சி முடிந்தவுடன் திரும்ப வழங்கப்படும்.
• விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி ஆண்டு தோறும்
எனவே, மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் ஐ.டி.ஐ-களுக்கான - 2026-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு மாணவ, மாணவியர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்












Click it and Unblock the Notifications