"ஸ்டேட் ஆப் தி ஆர்ட்".. பிரம்மாண்டமான அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்.. இளைஞர்களுக்கு குட் நியூஸ்
சென்னை: தமிழ்நாடு அரசின் ITI நிறுவனங்களை STATE OF THE ART மையங்களாக மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது தொழில்துறை ரீதியாக மிக பிரம்மாண்டமான மையங்களாக மாற்றி இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்த செயல்திட்டத்தை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள உள்ளது. எப்படி டைடன் நிறுவனம் டாடா உதவியுடன் செயல்படுகிறதோ அதேபோல் இந்த நிறுவனமும் இயங்கும். TATA நிறுவனத்துடன் இணைந்து ₹2800 கோடி மதிப்பீட்டில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது

டாடா முதலீடுகள்: ஏற்கனவே டாடா குழுமம் ஓசூரில் உள்ள ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. நடந்து வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டாடா - 12,082 கோடி ரூபாய் முதலீடு 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 40,000+ பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 20 அசெம்பிளி லைன்கள் கொண்ட புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்த வருடம் சென்னைக்கு மட்டுமின்றி வேறு பல மாவட்டங்களுக்கும் முக்கியமான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. முக்கியமாக பல மாவட்டங்களில் முதலீடுகள் செய்யப்படுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின.
அதன்படி தமிழ்நாட்டில் இந்த வருடம் ரூ100 கோடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஓசூர் டாடா நிறுவனம்: டாடா குழுமம் ஓசூரில் உள்ள ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
5,000 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டு 500 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட ஓசூர் யூனிட்டில் 15,000 பேர் பணிபுரிகின்றனர், விரிவாக்கத்திற்குப் பிறகு 25,000-28,000 ஊழியர்கள் வரை பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய ஐபோன் அசெம்ப்ளி ஆலையை ஓசூரில் டாடா உருவாக்க உள்ளது. 50,000+ பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 20 அசெம்பிளி லைன்கள் கொண்ட புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
டாடா எலெக்ட்ரானிக்ஸ், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஆக்சஸெரீஸ் ஒப்பந்த தயாரிப்பில் அதன் திறனை கணிசமாக விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த நிறுவனம் சமீபத்திதான் விஸ்ட்ரானின் ஐபோன் அசெம்பிளி ஆலையை வாங்கியது. இந்த புதிய ஆலை முற்றிலும் ஆப்பிள் போன் உதிரிபாகங்களுக்கானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது,.
டாடா எலக்ட்ரானிக்ஸ் ஓசூரில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு ஆலையை விரிவுபடுத்த ஆலைக்கு அருகில் உள்ள நிலத்தை இந்த ஆண்டு மே மாதம் தேடியது. போன் உதிரிபாகங்கள் தயாரிப்பதற்காக ஓசூரில் ஆலையை விரிவுபடுத்த தீவிரமாக முயன்றது. அதற்கான சூழ்நிலை இப்போதுதான் கைகூடி வந்துள்ளது.
ஓசூரில் முதலீடு: முக்கியமாக ஓசூரில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. உதாரணமாக தமிழ்நாட்டில் மின்சார பேட்டரி வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதற்காக ஓசூரில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுக்கும், ஓலா நிறுவனத்திற்கும் இடையே 7614 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கியமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழ்நாடு நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும் 20 மெகாவாட் மின்கலன்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளை அமைக்கவும் ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த சிப்களை உற்பத்தி செய்யும் உலகிலேயே பெரிய ஆலையாக இது இருக்க போகிறது என்று ஓலா நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த ஆலைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பூங்காவில் அமைக்கப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3,111 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications