வீடு, நிலம் வாங்க போறீங்களா? இப்பவே பேசி முடிச்சுடுங்க! எகிறப் போகுது ரேட்! உயரும் வழிகாட்டி மதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நிலம் வாங்கவும் நிலத்தை விற்கவும் திட்டமிட்டு இருந்தவர்களுக்கு முக்கியமான ஒரு செய்தி வெளி வந்திருக்கிறது. பத்திரப்பதிவு வருவாயை அதிகரிக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில் 60 சதவீதம் வரை நில வழிகாட்டி மதிப்பு என சொல்லப்படுகிறது

தமிழகம் முழுவதும் வீடு மற்றும் நிலம் வாங்குபவர்களுக்கு அடிப்படையே நில வழிகாட்டி மதிப்பு தான். குறிப்பிட்ட மாநகர், நகர், ஊரகப் பகுதிகளில் அரசின் நில வழிகாட்டு மதிப்பின் அடிப்படையில் தான் பத்திரப்பதிவு நடைபெறுகிறது .

இதன் மூலம் பத்திர பதிவுக்கு என்று குறிப்பிட்ட தொகை பத்திரப் பதிவுத் துறை சார்பில் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு பெரிய அளவில் சீரமைக்கப்படவில்லை.

land price guideline value registration

வழிகாட்டி மதிப்பு

இதனால் அரசு நிர்ணயத்துள்ள மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருந்தது. இது மட்டுமல்லாமல் நில வழிகாட்டி மதிப்பு குறைவு காரணமாக நிலம் மற்றும் கட்டிடங்கள் தொடர்பான பத்திரப்பதிவுகளில் அரசுக்கு கிடைக்க வேண்டிய உரிய வருவாய் தடைபட்டது. கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நிலங்களின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்திருக்கும் நிலையில் அரசு ஆவணங்களில் வழிகாட்டு மதிப்பு அதற்கேற்ப உயர்த்தப்படாமல் இருந்ததால் பத்திரப்பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

பத்திரப்பதிவு துறை

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வெளியான போது நிலங்களின் வழிகாட்டு மதிப்பு முரண்பாடு காரணமாக பத்திரப்பதிவு துறையில் வருவாய் கசிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், வருவாய் இழப்பு ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தமிழக அரசு

இதன் ஒரு பகுதியாக நில வழிகாட்டி மதிப்புகளை தற்போதைய சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைப்பது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை நடைபெற்று வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக முழுவதும் மாநகர், நகர், கிராம வாரியாக புதிய வழிகாட்டி மதிப்பு தொடர்பான விவரங்களை சேகரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

நகர்ப்புற வளர்ச்சி

ஒவ்வொரு கிராமத்திலும் தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டி மதிப்பு அந்தப் பகுதியில் நிலவும் சந்தை விலை புதிய வழிகாட்டி மதிப்பை எவ்வளவு நிர்ணயிக்கலாம் என்பது உள்ளிட்ட விவரங்களை சார் பதிவாளர்கள் தயாரித்து வருகின்றனர். மாநகராட்சியை பொறுத்தவரையில் நகர்ப்புற வளர்ச்சி அதிகமான பகுதிகளில் வழிகாட்டு மதிப்பு கணிசமாக உயர்த்தப்படலாம் என சொல்லப்படுகிறது. தற்போது சில இடங்களில் தற்போதைய மதிப்பை விட அதிகபட்சம் 40 சதவீதம் வரை நில வழிகாட்டு மதிப்பை உயர்த்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்கின்றன.

விவசாய நிலம்

இதேபோல நகராட்சிகள் பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் 50 சதவீதம் வரை வழிகாட்டி மதிப்பு உயர்வு இருக்கலாம் என சொல்கின்றனர். இது மட்டும் அல்லாமல் விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச மதிப்பிலும் மாற்றம் கொண்டு வருது தொடர்பாக பரிந்துரை தயாராகி வருகிறது. விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு ஏக்கருக்கு இரண்டு லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. இதை 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை உயர்த்தலாம் என சொல்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+