Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமேசான், அஜியோலாம் ஓரம் போ! இ-காமர்ஸ் தளத்தில் கால் வைத்த தமிழக அரசு! வெளியானது சூப்பர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டுவரும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் [EDII-TN], குறு, சிறு தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க "www.editn.in" வலைதளத்தின் கீழ் "e-marketplace", என்ற இணையவழி சந்தையினை உருவாக்கியுள்ளது.

உலக அளவில் இ-காமர்ஸ் எனப்படும் எலக்ட்ரானிக் வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சி கண்டு வருகிறது மின்னணு வழியில் நடைபெறும். இந்த வர்த்தகத்தின் மூலம் நம்மால் வீட்டில் இருந்தபடியே மொபைல் அல்லது கணினி மூலம் பொருட்களை வாங்க முடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளில் ஈ-காமர்ஸ் வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. அமேசான், பிளிப்கார்ட், மிந்த்ரா, மிசோ போன்ற நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் இந்திய வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

Tamil Nadu govt Marketplace MSME

விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களை இணையதளங்களில் பதிவு செய்தால் வாடிக்கையாளர்கள் அவற்றை பார்த்து தேர்வு செய்து பணம் செலுத்தி பெற்றுக் கொள்வார்கள். இந்த இணையதளங்கள் பொருள் விநியோகம், பணப்பரிவர்த்தனை, வாடிக்கையாளர் சேவை உள்ளிட்டவற்றை கவனித்துக் கொள்கின்றனர். இதன் மூலம் வீட்டிலிருந்தபடியே எந்த பொருளை வேண்டுமானாலும் வாங்க முடியும். 24 மணி நேர சேவை கிடைப்பதோடு தள்ளுபடி சலுகைகள் உள்ளிட்டவையும் கிடைக்கிறது என்பதால் மக்கள் அதனை அதிகம் வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் இருக்கும் சிறு குறு தொழில் முனைவோர் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசே ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கி இருக்கிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," இந்த இணையவழி சந்தையில், தொழில்முனைவோர் தங்கள் சொந்த முத்திரையுடன் தங்கள் தயாரிப்புகளை உலகளவில் விற்க ஒரு வழியை வழங்குகிறது. சந்தையில் "பயன்படுத்த எளிதான" டேஷ்போர்டு, எளிய பதிவேற்ற நடைமுறைகள், வாடிக்கையாளர்களுடன் நேரடி இணைப்பு போன்ற அம்சங்களும் உள்ளன.

உயர்தர உணவுப் பொருட்கள், அழகுப் பொருட்கள், வீட்டு பராமரிப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், ஹார்டுவேர்ஸ், கைவினைப் பொருட்கள், வீடு மற்றும் அலுவலகப் பொருட்கள், பொறியியல் பொருட்கள், எழுதுபொருட்கள், ஜவுளிப் பொருட்கள், பைகள், கம்பளங்கள், பரிசுப் பொருட்கள், ஆட்டோமொபைல் பொருட்கள், ஆட்டோ உதிரி பாகங்கள், விவசாயப் பொருட்கள், ரசாயனங்கள் போன்றவற்றை நுகர்வோர் இந்த இணையவழி சந்தையில் வாங்கலாம். இதன் சிறப்பம்சங்கள் கீழ்வருமாறு..

1) சிறு/குறு விற்பனையாளர்களுக்கு எளிய பதிவேற்ற முறைகள்.

2) தரமான பொருட்களை நியாயமான விலையில் நேரடியாக பெறுதல்.

3) சிறு தொழில்முனைவோரை ஆதரித்து தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை பெருக்குதல்

விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பின்வரும் https://marketplace.editn.in/ என்ற இணையவழி சந்தையில் தங்களை பதிவு செய்துகொள்ளலாம், தொடர்பு எண் : 9444459448 / 8668101901 தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க "www.editn.in" வலைதளத்தின் கீழ் "e-marketplace", என்ற இணையவழி சந்தையினை உருவாக்கியுள்ளது." என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+