குஜராத், கர்நாடகா ஓரம் போங்க.. முதலீட்டை அள்ளி முதலிடத்தில் தமிழ்நாடு! தட்டித் தூக்கிய சிஎம் விஜய்!
சென்னை: முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழக அரசு புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. 2026 - 2027 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டிலேயே அதாவது ஏப்ரல் மாதத்தில் இருந்து நான்கு மாதங்களுக்குள் சுமார் 50,000 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றவுடன் 1.5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக கூறியிருந்தார். மேலும் 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கூறியிருந்தார்.
இது ஒருபுறம் இருக்க தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் பயணம் மேற்கொண்டார். கடந்த 10ஆம் தேதி லண்டன் சென்ற அவருடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிகாரிகள் சென்றார். இதில் சில சர்ச்சைகளும் எழுந்தன.

ஆனால், அதனையும் தாண்டி தமிழ்நாடு அரசுக்கும் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் மூலம் மாநிலத்தில் 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் முதலீடுகளை ஈர்ப்பதில் டெல்லி, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை விட தமிழகம் முன்னணியில் இருப்பதாக மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் தரவுகள் கூறுகின்றன. 2026 - 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் அதாவது ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய 4 மாதங்களில் நாட்டிலேயே அதிகமாக அந்நிய முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்து புதிய சாதனை படைத்திருக்கிறது.
இந்த 4 மாதங்களில் மட்டும் 5.95 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது சுமார் 50,000 கோடி அந்நிய நேரடி முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்திருக்கிறது. இதன் மூலம் முதலீடுகளை இருப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மிகப்பெரிய சாதனை படைத்திருப்பதாக மத்திய தொழில் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை தரவுகள் சொல்லுகின்றன.
தமிழ்நாடு கடந்த 2025 - 2026 ஆம் நிதி ஆண்டில் 2. 7 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய முதலீட்டை ஈர்த்து இருந்தது. நடப்பு நிதியாண்டில் அது இருமடங்காக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாகத்தான் மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் இருக்கின்றன. அதாவதுமகாராஷ்டிரா 4.22 பில்லியன் டாலர் முதலீட்டையும், டெல்லி 2.67 பில்லியன் டாலர் முதலீட்டையும், கர்நாடகா 2.11 பில்லியன் டாலர் முதலீட்டையும், குஜராத் 1.30 பில்லியன் டாலர் முதலீட்டையும் ஈர்த்துள்ளன என்கின்றனமத்திய தொழில் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை தரவுகள்.


Click it and Unblock the Notifications
