100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக உருவெடுத்தது தமிழ்நாடு! அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் 98% என்று இருந்த நிலையில், தற்போது இந்த விகிதம் 100ஐ எட்டியிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது..

நாமெல்லாம் சின்ன வயசுல பள்ளிக்கூடம் சென்று கல்வி பயின்றிருப்போம். ஆனால், சிலருக்கு இந்த வாய்ப்பு மிக குறைவாகவே இருந்திருக்கிறது. எனவே நமக்கு முந்தைய தலைமுறையினரும் சரி, நம்முடைய தலைமுறையிலும் சரி, சிலர் எழுத்தறிவு பெறாதவர்களாக இருக்கிறார்கள்.

Tamil Nadu literacy rate

எனவே இவர்களை அடையாளம் கண்டு.. இவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவை கற்றுத்தர, தமிழக பள்ளிக் கல்வி அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் 'பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகம்'. இது மத்திய அரசின் 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' மற்றும் மாநில அரசின் 'கற்போம் எழுதுவோம்' திட்டம் மூலம், எழுத்தறிவு பெறாதவர்களுக்கு, கல்வியை சொல்லித்தருகிறது.

பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்கள்.. வீடு வீடாக சென்று எழுத்தறிவு பெறாதவர்களை கணக்கெடுப்பார்கள். இவர்களுக்கு அருகில் உள்ள பள்ளி, சமூக நலக்கூடம் உள்ளிட்ட இடங்களில் மாலை வேலைகளில் கல்வி கற்பிக்கப்படும். ஆண்டுக்கு சுமார் 200 மணி நேரம் கல்வி சொல்லித்தரப்படும். அடிப்படை தமிழ் எழுத்துக்கள், எண்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை கணக்குகள், ஸ்மார்ட்போன் பயன்பாடு, வங்கி படிவங்களை நிரப்புதல் ஆகியவை கற்றுத்தரப்படும்.

இப்படியாக தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு 4.31 பேருக்கு, அடிப்படை கல்வி கற்றுத்தரப்பட்டது. கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கற்றுக்கொடுத்தால் மட்டும் போதுமா? கற்றுக்கொடுத்ததை அவர்கள் எந்த அளவுக்கு உள்வாங்கியிருக்கிறார்கள் என்பது தெரிய வேண்டாமா? எனவே ஒவ்வொரு ஆண்டும் இதற்கான தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த நவ.18ம் தேதி தமிழகம் முழுவதும் 23,640 மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன.

இந்த தேர்வில் எதிர்பார்த்தைவிட.. அதாவது மொத்தம் 4.45 லட்சம் மக்கள் தன்னார்வமாக தேர்வில் பங்கேற்று, தங்களின் எழுத்தறிவை வெளிக்காட்டினார்கள். இது தமிழகத்தில் நடந்த சைலண்ட்டான பாசிட்டிவ் மாற்றமாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நமது மாநிலத்தின் எழுத்தறிவு 98% ஆக இருந்தது. இந்நிலையில் இந்த தேர்வை மேற்கோளிட்டு.. தேர்வின் மூலம் தமிழ்நாட்டின் எழுத்தறிவு 100%-ஐ எட்டியிருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

தற்போது தேர்வில் பங்கேற்றவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் தொடங்க உள்ளன. தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு பெற்றதற்கான சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்படும் என துறையின் இயக்குநர் குப்புசாமி தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+