இது லிஸ்ட்லயே இல்லையே! சென்னையில் அதிமுகவை "ஓவர் டேக்" செய்த பாஜக.. 2வது இடம்? என்ன நடக்கிறது?
சென்னை: சென்னையில் சில வார்டுகளில் அதிமுகவை பாஜக ஓவர் டேக் செய்துள்ளது. அதிமுக சென்னையில் எதிர்பார்த்ததை விட மோசமான பின்னடைவை சந்தித்துள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் மாபெரும் வெற்றியை நோக்கி திமுக சென்று கொண்டு இருக்கிறது.
சென்னை, கோவை, சேலம், மதுரை என்று 20 மாநகராட்சிகளில் திமுகதான் முன்னிலை வகிக்கிறது. அதிலும் கொங்கு மண்டலம் முழுக்க திமுகதான் முன்னிலை வகிக்கிறது.

சென்னை
சென்னையில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இந்த சென்னை மாநகராட்சியை எப்படியாவது திமுக கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்தில் களப்பணி ஆற்றி வந்தது. திமுக அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் சென்னை மாநகராட்சியில் தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வந்தனர். இந்த நிலையில்தான் சென்னையில் திமுக மாபெரும் முன்னிலையை பெற்றுள்ளது.

திமுக
சென்னையில் திமுக 33 மாநகராட்சி வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 12 வார்டுகளிலும் திமுகதான் வென்றுள்ளது. இன்னொரு பக்கம் அதிமுக 1 வார்டில் வென்றுள்ளது. அதிமுக 1 வார்டில் முன்னிலை வகிக்கிறது. மற்ற இடங்கள் எதிலும் அதிமுக எங்கும் முன்னிலை வகிக்கவில்லை. ஆச்சர்யமாக பாஜக 5 வார்டுகள் வரை 2ம் இடம் பிடித்துள்ளது.

பாஜக இரண்டாம் இடம்
சென்னை மாநகராட்சி 174-வது வார்டில் திமுக வென்றது. இங்கு 2-வது இடத்தை பாஜக பிடித்தது 3-வது இடத்தில் அதிமுக உள்ளது.
சென்னை மாநகராட்சி தேர்தலில் 174ம் வார்டில் பெறப்பட்ட வாக்குகள் விவரம்
திமுக-6343
பாஜக-1847
அதிமுக -1403
4960வாக்கு வித்தியாசத்தில் 174 வார்டு திமுக வேட்பாளர் ராதிகா வெற்றி பெற்றார்.

அதிமுக பின்னடைவு
அதேபோல் வார்ட் 54ல் பாஜக இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அங்கு இன்னும் வாக்கு எண்ணிக்கை முடியவில்லை.
திமுக - 3,570 (முன்னிலை)
பாஜக - 1142 (இரண்டாம் இடம்)
அதிமுக - 818
அதிமுகவை விட இங்கு பாஜக கிட்டத்தட்ட 300 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது.

சென்னை பின்னடைவு
சென்னையில் இன்னும் 3 வார்டுகளில் பாஜக அதிமுகவை முன்னிலை வகிப்பதாக (திமுக முதல் இடம், பாஜக இரண்டாம் இடம்) முதல்கட்ட தகவல்கள் வருகின்றன. இதனால் சென்னையில் ஒருவேளை பாஜக - அதிமுக கூட்டாக போட்டியிட்டு இருந்தால் கூடுதலாக சில இடங்களில் முன்னிலை வகித்து திமுகவை பின்னுக்கு தள்ளி இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணியை முறித்தது அதிமுகவிற்கு சென்னையில் இழப்பை கொடுத்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார்












Click it and Unblock the Notifications